கோடைக்காலத்தில் கரும்பு ஜூஸ் குடிப்பதில் இத்தனை நன்மைகளா?

By Gowthami Subramani
30 Apr 2024, 09:00 IST

கோடைகாலத்தில் அனைவரும் விரும்பி அருந்தும் பானங்களில் ஒன்று கரும்புச்சாறு ஆகும். கோடையில் கரும்புச்சாறு அருந்துவது உடல் ஆரோக்கியத்திற்கு முக்கிய நன்மைகளைத் தருகிறது

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த

இதில் கால்சியம், பொட்டாசியம், இரும்பு, மக்னீசியம் போன்றவை உள்ளது. இவை வெப்பம் தொடர்பான சோர்வை எதிர்த்துப் போராடுவதுடன், உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பராமரிக்கிறது

நீரேற்றம்

கரும்புச்சாறு சிறந்த இயற்கையான நீரேற்றமிகுந்த பானமாகும். இது கோடைக்காலத்தில் வியர்வையின் மூலம் இழக்கப்படும் திரவங்களை நிரப்ப உதவுகிறது

ஆற்றலை அதிகரிக்க

இந்த சாற்றில் நிறைந்துள்ள இயற்கை சர்க்கரைகள் விரைவான ஆற்றலை ஊக்குவிப்பதுடன், கோடைகால சோம்பலை எதிர்த்துப் போராட உதவுகிறது

குளிரூட்டும் பண்பு

கரும்புச்சாறு உடலுக்கு இயற்கையான குளிர்ச்சி பண்புகளைத் தருகிறது. இது கோடை வெப்பத்தை வெல்ல ஒரு புத்துணர்ச்சியூட்டும் பானமாக அமைகிறது

சரும ஆரோக்கியத்திற்கு

கரும்புச்சாற்றைத் தொடர்ந்து உட்கொள்வது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தி, சருமத்தில் நீர்ச்சத்து குறைவதைத் தடுத்து, தழும்புகள் மற்றும் முகப்பரு வராமல் தடுக்கிறது

செரிமான ஆரோக்கியத்திற்கு

கோடையில் கரும்புச்சாறு அருந்துவது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது வயிற்று நோய்த்தொற்றுகளைத் தடுக்கிறது. இதற்கு இதில் உள்ள அதிகளவிலன கரையக்கூடிய நார்ச்சத்துக்களே காரணமாகும்

நோயெதிர்ப்பு அமைப்பிற்கு

கரும்புச்சாற்றில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் உடலில் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. இது கோடை கால நோய்த்தொற்றுக்களை எதிர்த்துப் போராட உதவுகிறது

எடை மேலாண்மை

கரும்புச்சாறு இனிப்பாக இருப்பினும் இது குறைந்த கலோரிகள் மற்றும் கொழுப்பற்ற பானமாகும். இது உடல் எடையைக் கட்டுப்படுத்த நினைப்பவர்களுக்கு ஆரோக்கியமான தேர்வாகும்

இயற்கை நச்சு நீக்கியாக

கரும்புச்சாறு இயற்கையான நச்சு நீக்கியாக செயல்பட்டு, உடலில் இருந்து நச்சுக்கள் மற்றும் அசுத்தங்களை வெளியேற்றுவதன் மூலம் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களை சுத்தப்படுத்த உதவுகிறது