மிதமான உப்புத்தன்மையுடன் உப்பு நீரைக் குடிப்பது மிதமான அளவு மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் உட்கொள்ளும் போது சில ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம்
உடல் எடை இழப்பு
உப்பு நீர் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், பசியைக் குறைக்கவும் உதவுகிறது. இதனுடன் ஆரோக்கியமான உணவை சேர்த்துக் கொள்வதன் மூலம் எடையிழப்பு பயணத்தை ஆதரிக்கலாம்
செரிமான ஆரோக்கியத்திற்கு
உப்பு நீர் அருந்துவது செரிமான நொதிகளைத் தூண்டி சிறந்த செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
சிறந்த நீரேற்றத்திற்கு
உப்பு நீர் திரவங்களைத் தக்கவைத்து உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. அதிலும், குறிப்பாக உடற்பயிற்சிகளுக்குப் பிறகு அல்லது வெப்பமான காலநிலையில் உடல் நீரேற்றமாக வைக்க உதவுகிறது
எலக்ட்ரோலைட் சமநிலை
உப்பு நீரானது சோடியம் மற்றும் பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய எலக்ட்ரோலைட்டுகளை மீட்டெடுக்கிறது. இது செல்லுலார் செயல்பாட்டிற்கு முக்கியமானதாகும்
தொண்டை வலியை ஆற்ற
வெதுவெதுப்பான உப்பு நீர் கொப்பளிப்பு தொண்டை வலியை ஆற்ற சிறந்த தேர்வாகும். இவை தொண்டையில் உள்ள நச்சுக்களை நீக்கி அசௌகரியம் மற்றும் வீக்கத்தைக் குறைக்கிறது
நச்சு நீக்கியாக
உப்பு நீர் ஒரு இயற்கையாக நச்சு நீக்கியாக செயல்பட்டு, உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றவும் மற்றும் செரிமான அமைப்பை சுத்தப்படுத்தவும் உதவுகிறது