தூங்குவதற்கு முன் ஏன் பால் குடிக்கணும் தெரியுமா?

By Gowthami Subramani
20 Aug 2024, 08:30 IST

சிலர் இரவில் பால் அருந்துவதை பழக்கமாக வைத்திருப்பர். இதில் இரவு தூங்குவதற்கு முன் பால் அருந்துவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து காணலாம்

சிறந்த தூக்கத்திற்கு

பாலில் உள்ள டிரிப்டோபான் என்ற அமினோ அமிலம் செரோடோனின் மற்றும் மெலடோனின், தூக்கத்தைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்களை உற்பத்தி செய்ய உதவுகிறது. எனவே படுக்கைக்கு முன் பால் குடிப்பது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துகிறது

செரிமான ஆரோக்கியத்திற்கு

இதில் உள்ள நன்மை பயக்கும் புரோபயாடிக்குகள், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இவை செரிமானத்தை மேம்படுத்தவும் மற்றும் இரைப்பை குடல் பிரச்சினைகளின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது

எலும்பு ஆரோக்கியத்திற்கு

பாலில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி நிறைந்துள்ளது. இது எலும்புகளை வலுவாக்க உதவுகிறது. படுக்கைக்கு முன் பால் உட்கொள்வது எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன் ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தைக் குறைக்கிறது

நீரேற்றத்தை மேம்படுத்துவதற்கு

பால் அருந்துவது நீரேற்றத்தின் சிறந்த மூலமாகும். இதில் அத்தியாவசிய எலக்ட்ரோலைட்டுகள் இருப்பதால், படுக்கைக்கு முன் பால் குடிப்பது உடலின் திரவ சமநிலையை பராமரிக்க உதவுகிறது

நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரிக்க

பாலில் வைட்டமின் ஏ, பி12 மற்றும் துத்தநாகம் போன்ற வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது. இது நோயெதிர்ப்பு செயல்பாட்டை ஆதரிக்கிறது. இரவில் பால் உட்கொள்வது, தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடுவதற்கு உதவுகிறது

மனநிலை மேம்பாட்டிற்கு

பாலில் உள்ள டிரிப்டோபானில் இருந்து உற்பத்தி செய்யப்படும் செரோடோனின் நல்ல மனநிலையை மேம்படுத்தி, பதட்டம் மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கிறது. எனவே படுக்கைக்கு முன் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான பால் உட்கொள்வது மனநிலை மேம்பாட்டிற்கு உதவுகிறது