வெறும் வயிற்றில் வெண்டைக்காய் தண்ணீர் குடிச்சி பாருங்க.. சும்மா அப்படி இருக்கும்.!

By Ishvarya Gurumurthy G
28 Mar 2024, 08:50 IST

வெண்டைக்காய் பிடிக்குமா? அப்படி என்றால் வெறும் வயிற்றில் வெண்டைக்காய் தண்ணீரை குடிப்பதால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.

மலச்சிக்கல் பிரச்சனையை நீக்கும்

வெண்டைக்காய் தண்ணீரில் இருக்கும் அதிகப்படியான நார்ச்சத்து, வயிற்றை சுத்தம் செய்து செரிமான பிரச்சனைகளைச் சமாளிக்க உதவுவதால் மலச்சிக்கல் பிரச்சனைக்கு இது ஒரு நல்ல தீர்வாக அமைகிறது.

எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்

வெண்டைக்காயில் அதிகமாகக் காணப்படும் வைட்டமின் சி நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. மாறிவரும் பருவ காலத்தில், சளி, இருமல், காய்ச்சல் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் வாரத்திற்கு 1 முதல் 2 முறை வெண்டைக்காய் தண்ணீரை குடிப்பது நல்லது.

கண்பார்வை அதிகரிக்கும்

வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் வெண்டைக்காயில் அதிகமாக உள்ளது. இது கண்பார்வையை மேம்படுத்துகிறது. எனவே கண்பார்வையை அதிகரிக்க வெண்டைக்காய் தண்ணீரை தொடர்ந்து குடிக்கலாம்.

இரத்த சோகையை தடுக்கும்

வெண்டைக்காயில் இரும்புச்சத்து அதிகமாகக் காணப்படுகிறது. இரும்புச் சத்து நிறைந்த உணவை எடுத்துக் கொள்ளும்போது ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, இரத்த சோகையை தடுக்கிறது. வெண்டைக்காயில் உள்ள சத்துக்கள் இரத்த ஓட்டத்தைச் சீராக்கவும் உதவுகிறது.

எடையைக் கட்டுப்படுத்த உதவும்

வெண்டைக்காய் தண்ணீரில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடல் எடையைக் குறைக்கவும், உடல் பருமனை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.