குளிர்காலத்தில் கேரட் சாறு குடிச்சா என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

By Gowthami Subramani
19 Dec 2023, 12:25 IST

அன்றாட உணவில் கட்டாயம் சேர்க்க வேண்டிய உணவுகளில் கேரட்டும் அடங்கும். கேர சாற்றைக் குளிர்காலத்தில் எடுத்துக் கொள்வது பல்வேறு நன்மைகளைத் தருகிறது

கேரட்டின் ஊட்டச்சத்துக்கள்

கேரட் சுவைமிக்கதாக மட்டும் இல்லாமல் ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகவும் காணப்படுகிறது. இதில் பீட்டா கரோட்டின் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளது. இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது

நோயெதிர்ப்பு சக்தியை பலப்படுத்த

கேரட்டில் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. இது நோயெதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்த உதவும் சிறந்த ஆக்ஸிஜனேற்றியாகும். மேலும், இதில் உள்ள வைட்டமின் சி சத்துக்கள் நோயெதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்த உதவுகிறது

செரிமானத்திற்கு

கேரட் நல்ல நார்ச்சத்துக்கள் நிறைந்த மூலமாகும். இந்த சாற்றினை எடுத்துக் கொள்வது உடலில் செரிமான ஆரோக்கியத்திற்கு உதவுவதுடன், மலச்சிக்கல்லைத் தடுக்க உதவுகிறது

இதய ஆரோக்கியத்திற்கு

கேரட்டில் பொட்டாசியம் நிறைந்துள்ளதால் இவை இரத்த அழுத்த அளவை நிர்வகிக்க உதவுகிறது. இவை இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கின்றன

கண் பாதுகாப்பிற்கு

கேரட் சாற்றில் கண் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின் ஏ சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும், இதில் உள்ள லுடீன் மற்றும் ஜியாக்சாந்தின் கரோட்டினாய்டுகள் கண்களில் குவிந்து கண்களை சேதத்திலிருந்து பாதுகாக்கிறது

நீரிழிவு நோய்க்கு

குளிர்காலத்தில் நீரிழிவு நோயாளிகளுக்கு விரைவாக இரத்த சர்க்கரை அதிகரிக்கலாம். இதற்கு கேரட் ஜூஸ் குடிப்பதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்

சரும ஆரோக்கியத்திற்கு

அழகான சருமம் பெற விரும்புபவர்கள் கேரட் சாற்றை அருந்தலாம். இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் பீட்டா கரோட்டீன் போன்றவை சருமத்தை தெளிவாகவும், பளபளப்பாகவும் வைக்க உதவுகிறது