இரண்டு நிமிடம் நிம்மதியாக உட்காந்து சாப்பிட கூட நேரம் இல்லாமல் நாம் ஓடிக்கொண்டிருக்கிறோம். எனவே, பல முறை நமக்கே தெரியாமல் பல தவறுகளை செய்கிறோம். இதனால், பல தீமைகள் ஏற்படும். நம்மில் பலர் உணவு சாப்பிட்டவுடன் குளிப்போம். இதன் தீமைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
சாப்பிட்டதும் குளித்தல்
உணவு உண்ட உடனே குளிக்கக் கூடாது என்பது நம்பிக்கை. இவ்வாறு செய்வதால் உடலில் இரத்த ஓட்டம் பாதிக்கப்படும்.
வயிறு தொடர்பான பிரச்சனை
சாப்பிட்ட உடனேயே குளித்தால் செரிமானம் தடைபடும். இது வயிற்று வலி அல்லது பிற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.
உணவு ஜீரணமாகாது
சாப்பிட்ட பின் குளித்தால், உணவு சீக்கிரம் ஜீரணமாகாது. இதனால் பல வகையான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
சோம்பல் அதிகரிக்கும்
சாப்பிட்ட பின் குளித்தால் சோம்பேறித்தனம் ஏற்படும் என்பது ஐதீகம். உடலில் எரிச்சலை உண்டாக்கும்.
ஆரோக்கியத்தை பாதிக்கும்
உணவு உண்ட பிறகு குளிப்பது உடலுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இதனால் பல வகையான பிரச்சனைகள் ஏற்படும்.
எப்போது குளிக்க வேண்டும்?
ஜோதிட சாஸ்திரப்படி, சாப்பிட்டு 30 நிமிடம் கழித்துதான் குளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
கூடுதல் குறிப்பு
நேரமின்மை என்றால் லேசான சாப்பாடு சாப்பிட்டுவிட்டு உடனே குளிக்கலாம். இதனால் உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.