ஒரு வாரம் உப்பு இல்லாத உணவை சாப்பிட்டால் என்னவாகும்?

By Devaki Jeganathan
18 Nov 2024, 12:37 IST

“உப்பில்லா பண்டம் குப்பையிலே” என்ற பழமொழி இருந்தாலும் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் உப்பு சாப்பிடுவதை தவிர்ப்பார்கள். உப்பு சாப்பிடுவதை நாம் நிறுத்தும் போது பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இதன் தீமைகள் பற்றி பார்க்கலாம்.

குறைந்த இரத்த அழுத்தம்

மக்கள் வயதாகும்போது உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள். எனவே, 55 முதல் 60 வயதிற்குப் பிறகு மக்கள் என்ன செய்ய வேண்டும் என இங்கே பார்க்கலாம்.

ஹைபோநெட்ரீமியா

உப்பை மிக குறைவாக உட்கொள்வது ஹைபோநெட்ரீமியா எனப்படும் நிலைக்கு வழிவகுக்கும். இது உங்கள் இரத்த சோடியம் அளவு இயல்பை விட குறைவாக இருக்கும்போது ஏற்படும்.

ஹைபோநெட்ரீமியாவின் அறிகுறிகள்

தசைப்பிடிப்பு அல்லது பலவீனம், குமட்டல், வாந்தி, மற்றும் தலைசுற்றல் ஆகிய அறிகுறிகள் தோன்றலாம். கடுமையான சந்தர்ப்பங்களில், ஹைபோநெட்ரீமியா அதிர்ச்சி, கோமா மற்றும் மரணத்திற்கு வழிவகுக்கும்.

எவ்வளவு நாள் உப்பு இல்லாமல் இருக்கலாம்?

ஹைபோநெட்ரீமியா என்பது உடலில் சாதாரணமாக செயல்பட போதுமான உப்பு இல்லாத நிலை. உப்பை தவிர்த்தால், அதிக செயல்திறன் கொண்ட ஒரு விளையாட்டு வீரர் இரண்டு நாட்களுக்குள் ஆரோக்கிய பிரச்சினையை சந்திக்க நேரிடும்.

பிற சாத்தியமான ஆபத்துகள்

சோடியத்தை அதிகமாக கட்டுப்படுத்துவது இன்சுலின் எதிர்ப்பை அதிகரிக்கலாம். இது வகை 2 நீரிழிவு மற்றும் பிற தீவிர நோய்களுக்கு வழிவகுக்கும்.

எவ்வளவு உப்பு சாப்பிடணும்?

ஒரு சாதாரண நபருக்கு ஒரு நாளைக்கு 5 கிராம் உப்பு தேவை. அதாவது 1 தேக்கரண்டி. இருப்பினும், குறிப்பிடத்தக்க உணவு மாற்றங்களைச் செய்வதற்கு முன், நீங்கள் ஒரு சுகாதார நிபுணரை அணுக வேண்டும்.