பச்சை வெங்காயம் Vs சமைத்த வெங்காயம்.. எது சிறந்தது?

By Ishvarya Gurumurthy G
21 Dec 2023, 18:00 IST

பச்சை வெங்காயம், சமைத்த வெங்காயம் ஆகியவற்றில் எது மிகுந்த நன்மைக் கொண்டது என்பதை இந்த பதிவை முழுமையாக படித்துத் தெரிந்துக் கொள்வோம்.

இந்தியாவில் வெங்காயம் இல்லாமல் உணவு முழுமையடையாது. உணவில் வெங்காயம் இல்லை என்றால் பலரும் திருப்தி அடையமாட்டார்கள். பச்சை வெங்காயத்தை விரும்பி சாப்பிடுபவர்கள் ஏராளம். வெங்காயத்தை பச்சையாகவும் சமைத்ததாகவும் சாப்பிடுகிறார்கள். வெங்காயத்தை பச்சையாகவோ அல்லது சமைத்தோ சாப்பிடுவதல் கிடைக்கும் பலன்கள் என்ன தெரியுமா?

சமைத்த வெங்காயத்தின் நன்மைகள்

சமைத்த வெங்காயத்தில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இது மலச்சிக்கல், வாயு போன்ற பிரச்சனைகளை நீக்கும். செரிமான அமைப்பும் மேம்படும்.

எந்த வெங்காயம் நல்லது?

நீங்கள் அதிக கந்தக கலவைகளை பெற விரும்பினால் பச்சை வெங்காயத்தை சாப்பிடுவது நல்லது. இதோடு பச்சை வெங்காயத்தில் பல ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன.

சல்பர் கலவையின் நன்மைகள்

சல்வர் கலவை உங்கள் கண்களை நீர்க்கச் செய்கிறது. இரத்தக் கட்டிகளைத் தடுப்பது, பக்கவாதம் மற்றும் இதய நோய் அபாயத்தை குறைக்கும். புற்றுநோயை தடுக்கவும் வெங்காயம் உதவுகிறது.

பச்சை வெங்காய தீமைகள்

சமைத்த வெங்காயத்தை விட பச்சை வெங்காயம் அதிக நன்மை பயக்கும் என்றாலும் சில தீமைகளும் உள்ளது. வாய் துர்நாற்றம். நெஞ்செரிச்சல், அமிலத்தன்மை, குடல் நோய்க்குறி போன்றவைகளை ஏற்படுத்தும்.

சமைத்த வெங்காயத்தை விட பச்சை வெங்காயம் உட்கொள்வது அதிக நன்மை பயக்கும்.