இரவில் தூங்கும் முன் 1 பல் பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

By Karthick M
14 Mar 2024, 00:51 IST

மருத்துவ குணங்கள் நிறைந்த பூண்டு

பல மருத்துவ குணங்கள் பூண்டில் உள்ளது. தினமும் இரவில் தூங்கும் முன் 1 பல் பூண்டு சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இதனால் கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம்.

பூண்டு சத்துக்கள்

புரதம், வைட்டமின் பி6, சி, செலினியம், இரும்புச்சத்து, வைட்டமின் கே போன்ற ஏராளமான பண்புகள் பூண்டில் உள்ளது.

விந்தணு எண்ணிக்கை

இரவில் தூங்கும் முன் 1 பல் பூண்டு சாப்பிடுவது விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும். தேன் சேர்த்து சாப்பிடுவது கூடுதல் நன்மை.

எடை இழப்பு

அதிக எடையை கட்டுப்படுத்த இரவில் தூங்கும் முன் 1 பல் பூண்டை சாப்பிடுங்கள். இது உடல் பருமனை தடுப்பதோடு கொழுப்பு சேருவதையும் தடுக்கும்.

பல்வலி நிவாரணம்

பல்வலி குணமாக பூண்டை 1 பல் எடுத்து சாப்பிட்டு வர பல்வலி குணமாகும். இதில் ஆன்டி-பயாடிக் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன.

நோய் எதிர்ப்பு சக்தி

பூண்டை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதேபோல் சளி, இருமலுக்கும் நிவாரணம் அளிக்கும்.

முழுமையாக படித்ததற்கு நன்றி

அதேபோல் கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்ட சிலர் பூண்டு உட்கொள்ளும் முன் மருத்துவர் ஆலோசனை பெறுவது நல்லது.