உடல் எடையை குறைக்க நீங்கள் பல பழங்களை பயன்படுத்தி இருக்கலாம். ஆனால் இதற்கு கொய்யா பேருதவியாக இருக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?
கொய்யாவில் காணப்படும் அத்தியாவசிய பண்புகள் எடை குறைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதற்கு கொய்யாவை சரியாக உட்கொள்வது அவசியம். அது எப்படி என பார்க்கலாம்.
கொய்யாவில் கலோரிகளின் அளவு மிகக் குறைவாக இருப்பதால், அதை உட்கொள்வதால் அதிக கலோரிகள் பிரச்சனையை ஏற்படுத்தாது. கொய்யாவில் 37 முதல் 55 கலோரிகள் மட்டுமே உள்ளது.
கொய்யாவில் நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்துள்ளது, கொய்யாவை உட்கொண்ட பிறகு ஒருவருக்கு நீண்ட நேரம் பசி ஏற்படாது.
கொய்யா முழுமையாக ஜீரணிக்க நேரம் எடுக்கும் மற்றும் உங்களுக்கு பசி ஏற்படாது. நார்ச்சத்து அதிகம் இருப்பதால், உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, எடையைக் குறைக்க உதவுகிறது.
கொய்யா பழத்தை ஸ்மூத்தி செய்தும், புதினா சாறு செய்தும், சாலட் முறையும் சாப்பிடலாம். கொய்யாவில் இதுபோன்ற ஏணைய பண்புகள் உள்ளது.