நெய்யில் வறுத்த மக்கானா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

By Gowthami Subramani
31 Oct 2024, 22:38 IST

நெய்யில் வறுத்த மக்கானா உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும். இதில் நெய்யில் வறுத்த மக்கானா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் சிலவற்றைக் காணலாம்

நெய்யில் வறுத்த மக்கானா ஒரு அருமையான மற்றும் ஆரோக்கியமான சிற்றுண்டித் தேர்வாகும். இதன் குறைந்த கொழுப்பு மற்றும் அதிக புரத உள்ளடக்கம் காரணமாக, இது ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரிக்க விரும்புவோருக்கு ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது

சுவையை அதிகரிக்க

நெய்யில் மக்கானாவை வறுக்கும் போது அது செழுமையான, வெண்ணெய் சுவையைத் தருகிறது. இதன் சுவையை மேலும் இதில் சிறிது உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்துக் கொள்ளலாம்

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த

நெய் ஆரோக்கியமான கொழுப்புகளின் மூலமாகும். மேலும் இதில் வைட்டமின்கள் ஏ, டி, ஈ மற்றும் கே போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இதனை நெய்யில் வறுக்கும் போது ஊட்டச்சத்து மதிப்பை அதிகரிக்கிறது

ஆற்றலை அதிகரிக்க

நெய் உடலுக்கு ஆற்றலை அளிக்கக் கூடியது. இதில் மக்கானாவை வறுக்கும்போது, நிலையான ஆற்றலை வழங்க ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது

கல்லீரல் நச்சுக்களை நீக்க

நெய்யில் வறுத்த மக்கானாவை உட்கொள்வது குறைந்த சோடியம் உட்கொள்ளலுக்கு வழிவகுக்கிறது. இதன் மூலம் கொலஸ்ட்ரால் அளவை பராமரிக்கிறது

ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த

நெய் அதன் ஆக்ஸிஜனேற்ற பண்புகளுக்காக நன்கு அறியப்படுகிறது. மேலும் இதை மக்கானாவுடன் இணைப்பதால் அது ஃப்ரீ ரேடிக்கல்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து உடலைப் பாதுகாக்க உதவுகிறது

பசியைக் கட்டுப்படுத்த

மக்கானாவில் குறைந்த கலோரிகள், அதிக நார்ச்சத்துக்கள் உள்ளது. இதை நெய்யில் வறுக்கும் போது பசியைக் கட்டுப்படுத்த உதவும் ஒரு சிறந்த சிற்றுண்டியாக அமைகிறது. குறிப்பாக, இது எடையைக் கட்டுப்படுத்த விரும்புவோர்க்கு ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது