பாலில் நெய் கலந்து கலந்து குடிப்பது எவ்வளவு நல்லது தெரியுமா?

By Devaki Jeganathan
23 Feb 2024, 17:00 IST

பாலில் நெய் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதில் உள்ள மருத்துவ குணங்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள், உடலை வலுவாக்க வைக்க உதவும். அதன் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.

பாலில் நெய் சேர்ப்பது எப்படி?

இதற்கு முதலில் சிறிது நெய்யை சூடாக்கி, அதை 1 கிளாஸ் சூடான பால் சேர்த்து அதை உட்கொள்ளவும். நீங்கள் காலையில் வெறும் வயிற்றில் அல்லது இரவில் சாப்பிடலாம்.

எலும்பு வலுவாகும்

பாலில் நெய் கலந்து சாப்பிட்டு வர எலும்புகள் வலுவடையும். இது தவிர மூட்டு வலி மற்றும் வீக்கத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

சிறந்த தூக்கம்

பாலில் நெய் கலந்து சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும். இதனை உட்கொள்வதால் தூக்கமின்மையில் இருந்து விடுபடுவதுடன் தூக்கம் மேம்படும்.

மன அழுத்தம்

மன அழுத்தத்தைக் குறைக்க நெய்யில் பால் சேர்த்து பருகலாம். இதனால் மன அழுத்தம் மற்றும் சோர்வு நீங்கி உடலுக்கு சக்தி கிடைக்கும்.

சரும பொலிவு

பாலில் நெய் கலந்து சாப்பிடுவது சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதை உட்கொள்வது உடலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவுகிறது. இது முகத்திற்கு இயற்கையான பளபளப்பைக் கொண்டுவருகிறது மற்றும் சருமத்தை மென்மையாக்குகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி

பாலில் நெய் கலந்து குடிப்பதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி பலப்படும். இது உடலை பலப்படுத்துகிறது மற்றும் நோய்களிலிருந்து உடலைப் பாதுகாக்க உதவுகிறது.

சிறந்த செரிமானம்

பாலுடன் நெய் கலந்து சாப்பிட்டால் செரிமான சக்தி அதிகரிக்கும். இதை உட்கொள்வது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் செரிமான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.