வறுத்த பட்டாணி சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு இவ்வளவு நல்லதா?

By Devaki Jeganathan
20 Dec 2023, 23:31 IST

பட்டாணி குளிர்காலத்தில் வளரும் ஒரு பச்சை காய்கறி. இது பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. பட்டாணி கிரேவி அல்லது பட்டாணி பொரியல், பட்டாணி அவியல் சாப்பிட்டு அலுப்பாக இருந்தால், வறுத்து சாப்பிடுங்கள். அது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதன் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.

பச்சை பட்டாணி சத்துக்கள்

மெக்னீசியம், சோடியம், வைட்டமின் சி, பி6, இரும்பு, பொட்டாசியம், ஃபைபர் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. மேலும், இதில் அதிக அளவில் நார்ச்சத்து மற்றும் குறைந்த கலோரிகள் உடல் எடையை குறைக்க உதவுகிறது.

வயிற்றுக்கு நல்லது

வறுத்த பச்சை பட்டாணியை உட்கொள்வது உங்கள் வயிற்றுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. இதில் நார்ச்சத்து உள்ளது, இது மலச்சிக்கல் மற்றும் அஜீரண பிரச்சனையை நீக்குகிறது.

மன அமைதி

பச்சை பட்டாணியில் வைட்டமின் கே மற்றும் பீட்டா கரோட்டின் பண்புகள் உள்ளன. அவற்றை வறுத்து சாப்பிட்டால் நினைவாற்றலைக் கூர்மைப்படுத்துகிறது.

ஆரோக்கியமான கண்கள்

வைட்டமின் ஏ நிறைந்த பச்சை பட்டாணி சாப்பிடுவது கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இது உங்கள் கண்களை கூர்மையாக்கும்.

ஹீமோகுளோபின் அதிகரிக்கும்

வறுத்த பச்சை பட்டாணி சாப்பிடுவது உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. அவை இரும்புச்சத்து நிறைந்தவை.

நோய் எதிர்ப்பு சக்தி

பச்சை பட்டாணியில் வைட்டமின் சி பண்புகள் அதிகம் உள்ளது. இதனை உட்கொள்வதால் நோய்களை எதிர்த்துப் போராடும் உடலின் ஆற்றல் அதிகரிக்கிறது. வறுத்த பச்சை பட்டாணி சாப்பிடுங்கள்.

எடை இழப்பு

நார்ச்சத்து நிறைந்த பச்சை பட்டாணியை வறுத்து சாப்பிடுவதும் உடல் எடையை குறைக்க உதவுகிறது. இவற்றை உண்பதால், நீண்ட நேரம் வயிறு நிரம்பியிருப்பதோடு, அதிகமாக சாப்பிடுவதையும் தவிர்க்கலாம்.