தினமும் கோதுமை சப்பாத்தி சாப்பிடுவது நல்லதா?

By Gowthami Subramani
18 Oct 2024, 09:34 IST

முழு கோதுமை சுத்திகரிக்கப்பட்ட கோதுமையை விட ஆரோக்கியமானதாகும். ஏனெனில் இதில் அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்திருக்கும். இதில் தினமும் கோதுமை சப்பாத்தி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த

கோதுமை சப்பாத்தி வைட்டமின்கள் B1, B3 மற்றும் B6 போன்ற வைட்டமன்கள், இரும்பு, மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது

எடை மேலாண்மைக்கு

கோதுமை சப்பாத்தி ஆனது குறைந்த கலோரி விருப்பமாகும். எனவே இது எடை மேலாண்மைக்கு சிறந்த தேர்வாக அமைகிறது

செரிமான ஆரோக்கியத்திற்கு

நார்ச்சத்து நிறைந்த கோதுமை சப்பாத்தி செரிமானத்திற்கு உதவுகிறது. மேலும் இதன் அதிக நார்ச்சத்துக்கள் மலச்சிக்கல்லைத் தடுக்க உதவுகிறது

இரத்த சர்க்கரையை சீராக்க

முழு கோதுமை சப்பாத்தி குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. இதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த

கோதுமை சப்பாத்தியில் உள்ள நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலில் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது. இதன் மூலம் இதய ஆரோக்கியத்தைப் பராமரிக்கிறது

நீடித்த ஆற்றலை வழங்க

இது கார்போஹைட்ரேட்டுகளால் நிரம்பிய ஆற்றலின் நல்ல ஆதாரமாகும். எனவே சப்பாத்தி உட்கொள்வது நாள் முழுவதும் நீடித்த ஆற்றலை வழங்குகிறது