பச்சை வாழைப்பழத்தை இப்படி சாப்பிட்டா எந்த பிரச்சனையும் வராதாம்.

By Gowthami Subramani
19 Dec 2023, 21:57 IST

பச்சை வாழைப்பழம் இன்று பலரும் உண்ணும் உணவுப் பொருள்களில் ஒன்றாக மாறிவிட்டது. இது உண்பதற்கு மிகவும் சுவையாக இருக்கும். ஆனால், பலர் இதை விரும்ப மாட்டார்கள். ஆனால் பச்சை வாழைப்பழத்தினை உண்பது உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளைத் தருகிறது

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த

வாழைப்பழத்தில் வைட்டமின் சி, பி6 மற்றும் பொட்டாசியம் போன்றவை நிறைந்துள்ளது. மேலும் இதில் ஏராளமான நார்ச்சத்துக்கள் உள்ளது. இவற்றை எடுத்துக் கொள்வது பல்வேறு நோய்களிலிருந்து நிவாரணம் தருகிறது

செரிமான மேம்பாட்டிற்கு

பச்சை வாழைப்பழங்களை உண்பது செரிமான அமைப்பை மேம்படுத்த உதவுகிறது. இதில் உள்ள நார்ச்சத்துக்கள் செரிமானத்தை ஊக்குவித்து மலச்சிக்கல் பிரச்சனையைத் தடுக்க உதவுகிறது

ஹீமோகுளோபின் அதிகரிக்க

இதில் உள்ள வைட்டமின் பி6 ஊட்டச்சத்துக்கள் உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது. ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ளவர்கள் இந்த பச்சை வாழைப்பழத்தை எடுத்துக் கொள்ளலாம்

இதய ஆரோக்கியத்திற்கு

பச்சை வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் சத்துக்கள் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை தருகிறது. இதை தினமும் உட்கொள்வதன் மூலம் இதயம் தொடர்பான பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்

நீரிழிவு நோய்க்கு

நீரிழிவு நோயாளிகள் பச்சை வாழைப்பழத்தை எடுத்துக் கொள்வது மிகவும் நன்மையைத் தரும். டைப் 2 நீரிழிவு நோய் உள்ளவர்கள் பச்சை வாழைப்பழத்தை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இது சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது

உடல் எடை இழப்பிற்கு

இதில் உள்ள நார்ச்சத்துக்கள் உடல் எடையைக் குறைப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே உடல் எடையைக் கட்டுப்படுத்த விரும்புபவர்கள் பச்சை வாழைப்பழத்தை எடுத்துக் கொள்ளலாம்

தசை வலிமைக்கு

பச்சை வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் சத்துக்கள் தசைகளை வலுவாக்கி, உடலில் ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது