உடல் எடையைக் குறைக்க அன்றாட உணவுமுறையில் சில பழங்களை எடுத்துக் கொள்ளலாம். இந்த வரிசையில் பிளம்ஸ் பழங்களும் அடங்கும். இதில் எடை குறைய பிளம்ஸ் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்
செரிமானத்தை மேம்படுத்த
பிளம்ஸ் பழத்தில் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், மலச்சிக்கல் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது
பசியைக் கட்டுப்படுத்த
பிளம்ஸில் உள்ள நார்ச்சத்துக்கள் மற்றும் நீர்ச்சத்துக்கள் பசியைக் குறைக்கவும், வயிறு நிரம்பிய உணர்வுகளை மேம்படுத்தவும் உதவுகிறது. இதை மாலை சிற்றுண்டி அல்லது இரவு உணவாக எடுத்துக் கொள்ளலாம்
குறைந்த கலோரி நிறைந்த
பிளம்ஸ் பழம் குறைந்தளவிலான கலோரிகளைக் கொண்டதாகும். இது மற்ற ஆரோக்கியமற்ற உணவுகள் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க உதவுகிறது
குடல் பாக்டீரியாவை ஆதரிக்க
பிளம்ஸில் உள்ள ப்ரீபயாடிக் நார்ச்சத்துக்கள் ஆரோக்கியமான குடல் பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. ஆரோக்கியமான எடையை பராமரிக்க குடல் நுண்ணுயிர் அவசியமாகும்
வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த
பிளம்ஸில் உள்ள தனித்துவமான கலவை வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது. இதை தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் எடையிழப்பை ஊக்குவிக்கலாம்
ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்த
இந்த பழத்தில் உள்ள பாலிபினால்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் உள்ளிட்ட ஆக்ஸிஜனேற்றிகள் எடையிழப்பை ஊக்குவிக்கிறது
இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க
பிளம்ஸில் உள்ள ஒரு வகை நார்ச்சத்துக்கள் பழங்களிலிருந்து சர்க்கரையை இரத்தத்தில் உறிஞ்சுவதை மெதுவாக்கிறது. இது ஆரோக்கியமான இரத்த சர்க்கரை அளவை பராமரிக்கவும், இன்சுலின் எதிர்ப்பை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது
பிளம்ஸ் நன்மைகள்
பிளம்ஸ் பழங்கள் குறைந்த கலோரிகள், அதிக நார்ச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்ததாகவும் காணப்படுகிறது. இது ஒரு சுவையான பழமாகும். அன்றாட உணவில் இதை சேர்த்துக் கொள்வது எடையிழப்புக்கான இலக்குகளை அடைய உதவுகிறது