வாழை இலையில் சாப்பிடுவது எவ்வளவு நல்லது தெரியுமா?

By Devaki Jeganathan
13 May 2024, 10:38 IST

.

வாழை இலையில் சாப்பிடுவது தென் இந்தியாவின் கலாச்சாரமாக கருதப்படுகிறது. எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் வாழை இலையில் சாப்பிடுவது வழக்கம். வாழை இலையில் சாப்பிடுவது ஆரோக்யத்தியிக்கு நல்லது. இதன் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.

வாழை இலையின் பண்புகள்

வாழை இலையில் பாலிபினால்கள், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி போன்ற பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. வாழை இலையில் உணவை வைக்கும்போது, ​​இந்த சத்துக்களில் சில உணவுக்கு மாற்றப்பட்டு, அதன் ஊட்டச்சத்து மதிப்பை அதிகரிக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தி

வாழை இலைகளில் பாலிபினால்கள் காணப்படுகின்றன. பாலிபினால்கள் இயற்கையான ஆக்ஸிஜனேற்றிகளாகும். அவை ஃப்ரீ ரேடிக்கல்கள் மற்றும் உடலில் இருக்கும் பிற நோய்களிலிருந்து பாதுகாக்கின்றன.

உணவின் சுவை கூடுகிறது

வாழை இலைகளில் மெழுகு போன்ற மேல் அடுக்கு இருக்கும். இந்நிலையில், இந்த இலைகளில் சூடான உணவைப் பரிமாறுவது உணவின் சுவையை அதிகரிக்கிறது.

சுகாதாரமானவை

இவை மிகவும் சுகாதாரமானவை மற்றும் சிறிதளவு தண்ணீரில் சுத்தம் செய்து பயன்படுத்தலாம். பிளாஸ்டிக்கிற்கு பதிலாக இவற்றில் உணவு உண்பது சுகாதாரமானது.

தோலுக்கு நல்லது

வாழை இலைகளில் எபிகல்லோகேடசின் கேலேட் மற்றும் ஈஜிசிஜி போன்ற பாலிஃபீனால்கள் ஏராளமாக காணப்படுகின்றன. இந்நிலையில், இந்த இலைகளை சாப்பிடுவது சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

சிறந்த செரிமானம்

வாழை இலையில் காணப்படும் பாலிபினால்கள் செரிமான நொதிகளின் உற்பத்தியைத் தூண்டுகின்றன. இந்த இலைகளை சாப்பிட்டால் செரிமானம் மேம்படும்.

நச்சுத்தன்மையற்றவை

செயற்கைத் தட்டுகள் அல்லது வாழை இலை மாற்றுகளைப் போலன்றி, வாழை இலைகள் நச்சுத்தன்மையற்றவை. அவை உணவில் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் அல்லது நச்சுகளை வெளியிடுவதில்லை.