ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆப்ரிகாட் பழங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும். இதில் ஆப்ரிகாட் பழம் தரும் நன்மைகளைக் காணலாம்
இயற்கையான சர்க்கரை
சர்க்கரையின் இயற்கையான ஆதாரத்தை ஆப்ரிகாட் வழங்குகிறது. இதில் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களுடன் இயற்கையான இனிப்புப் பசியைப் பூர்த்தி செய்கிறது
இதய ஆரோக்கியத்திற்கு
ஆப்ரிகாட்டில் பொட்டாசியம் சத்துக்கள் அதிகம் உள்ளது. இது இரத்த அழுத்தத்தை சீராக்கவும், இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது
மலச்சிக்கல்லைத் தடுக்க
ஆப்ரிகாட் பழத்தில் உள்ள நார்ச்சத்துக்கள் ஆரோக்கியமான செரிமானத்திற்கு உதவுகிறது. இவை மலச்சிக்கலை தடுக்கவும், சிறந்த குடல், செயல்பாட்டையும் ஆதரிக்கிறது
ஆற்றலை அதிகரிக்க
பாதாமி பழங்களில் உள்ள இயற்கையான சர்க்கரைகள் விரைவான, நீடித்த ஆற்றல் ஊக்கத்தை அளிக்கிறது. இது சுறுசுறுப்பான வாழ்க்கை முறைக்கு சிறந்த சிற்றுண்டியாக அமைகிறது
வீக்கத்தைக் குறைக்க
ஆப்ரிகாட் பழத்தில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் வீக்கத்தைக் குறைக்கவும், மூட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. அதே நேரம் இதன் அதிக நீர் உள்ளடக்கம் நீரேற்றத்திற்கு உதவுகிறது
சுருக்கங்களை குறைக்க
பாதாமி பழங்கள் சருமத்தை புதுப்பிக்கவும், கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்க மற்றும் சுருக்கங்களைக் குறைக்கவும் உதவுகிறது