விதை ஒன்று பலன் நூறு.. மல்லி விதையின் வியக்க வைக்கும் நன்மைகள்!

By Devaki Jeganathan
17 Jan 2024, 15:20 IST

கொத்தமல்லி விதைகள் ஒரு சூப்பர்ஃபுட் என்று அழைக்கப்படுகிறது. வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் பல மருத்துவ குணங்கள் இதில் உள்ளன. இவை நம்மை பல நோய்களில் இருந்து பாதுகாக்கிறது. இதன் பயன்கள் பற்றி பார்க்கலாம்.

சிறந்த செரிமானம்

கொத்தமல்லி விதையில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன, இது செரிமான பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது. மேலும், ஜீரண சக்தியை பலப்படுத்துகிறது.

இதய ஆரோக்கியம்

கொத்தமல்லி விதைகள் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. இது இரத்த அழுத்தத்தையும் மேம்படுத்துகிறது, இது சிறந்த இதய ஆரோக்கியத்திற்கு முக்கியமானது.

எடை குறைக்க

கொத்தமல்லி சாப்பிடுவது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கிறது. இது எடையைக் குறைக்க உதவுகிறது. தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடலாம்.

சர்க்கரை நோய்

கொத்தமல்லி விதைகளில் நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் உள்ளன, இது இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவைக் கட்டுப்படுத்த உதவும்.

நோய் எதிர்ப்பு சக்தி

கொத்தமல்லி விதைகள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, பல நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.

முடிக்கு நல்லது

வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் பிற கூறுகள் இதில் காணப்படுகின்றன, இது முடியை வலுப்படுத்துகிறது. இதன் நீரை தினமும் குடித்து வந்தால் முடி உதிர்வை குறைக்கலாம்.

கண்களுக்கு நல்லது

வைட்டமின்-ஏ, வைட்டமின்-சி, வைட்டமின்-ஈ போன்ற பல சத்துக்கள் கொத்தமல்லியில் இருப்பதால் கண்பார்வையை மேம்படுத்துகிறது. இந்நிலையில், நீங்கள் அதன் விதைகளை ஊறவைத்து தண்ணீருடன் சாப்பிடலாம்.