சுகர், பிபிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வெங்காய டீயை இப்படி தயார் செய்து குடிங்க

By Gowthami Subramani
17 Jan 2024, 12:56 IST

உணவுப் பொருளான வெங்காயம் உடல் ஆரோக்கியத்திற்கு பலவிதமான நன்மைகளைத் தருகிறது. ஆனால் வெங்காயத்தைப் போலவே வெங்காய டீயும் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும்

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த

ஒவ்வாமை எதிர்ப்பு, புற்றுநோய் எதிர்ப்பு மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகள் வெங்காயத்தில் உள்ளது. இவை பல நோய்களைக் குணப்படுத்த உதவுகின்றன

நீரிழிவு நோய்க்கு

சர்க்கரை நோயாளிகளுக்கு வெங்காய டீ மிகவும் நன்மை பயக்கும். ஏனெனில் வெங்காயத்தில் உள்ள வைட்டமின் ஏ, கே மற்றும் சோடியம் போன்றவை இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது

உடல் எடை இழப்புக்கு

உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் வெங்காய டீ அருந்தலாம். இது வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது. இது உடலில் தேங்கியிருக்கும் அதிகப்படியான கொழுப்பை வேகமாக எரிக்கிறது

நோயெதிர்ப்புச் சக்திக்கு

நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க விரும்புபவர்கள் வெங்காய டீயை உட்கொள்ளலாம். வெங்காயத்தில் உள்ள வைட்டமின் சி உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது

இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த

இதய நோயாளிகளுக்கு வெங்காய டீ நன்மை பய்க்கும். இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது

புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க

வெங்காய தேநீர் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் குறைக்க உதவுகிறது. மேலும் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது

ஆனியன் டீ தயாரிப்பு

முதலில் வெங்காயத்தை கழுவி நறுக்கி, அதை குக்கரில் 3 கிளாஸ் தண்ணீரில் சேர்த்து நன்றாக வதக்கவும். பின் தண்ணீரை வடிகட்டி அதில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் கிரீன் டீ பேக் சேர்த்து நன்கு கலந்து குடிக்கலாம்

இவ்வாறு வெங்காய டீ தயாரித்து குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது