வெயிலின் உஷ்ணத்தைத் தணிக்க குளிர்ந்த நீரை அருந்த விரும்புவது இயல்பு. ஆனால் இது நல்லதா, கெட்டதா என்பதை பார்க்கலாம்.
பலர் குளிர்ந்த நீரை குடித்துவிட்டு வேலைக்காக வெளியே செல்கின்றனர். இவ்வாறு செய்வது உடல் நலத்திற்கு நல்லதல்ல.
பிளாஸ்டிக் பாட்டில்களில் குளிரூட்டப்பட்ட தண்ணீரை நிரப்பி வெளியே செல்லும் போது வெயிலில் பிளாஸ்டிக் உருகி தண்ணீரில் கலக்கும்.
வெயிலில் இருந்து வந்த உடனே குளிர்ந்த நீர் குடித்தால், உடலின் இரண்டு வெப்பநிலையிலும் மாற்றம் ஏற்பட்டு, இரத்த நாளங்கள், இதயத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
மொத்தமாக ஃப்ரிட்ஜ் தண்ணீருக்குப் பதிலாக பானை தண்ணீரைக் குடிப்பது எல்லா வகையிலும் நல்லது.