குளிர்காலத்தில், ஒரு சூடான கப் நெய் காபியை அருந்துவது உடல் ஆரோக்கியத்திற்குப் பல்வேறு நன்மைகளைத் தருகிறது. இதில் நெய் காபி அருந்துவதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்
எடையிழப்புக்கு
நெய்யில் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளது. இவை கொழுப்பு எரிவதை ஊக்குவிக்கவும், பசியைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இதை மிதமான அளவில் உட்கொள்வது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி, எடை மேலாண்மைக்கு உதவுகிறது
செரிமான ஆரோக்கியத்திற்கு
வயிற்றில் அமில உற்பத்தியைத் தூண்டுவதன் மூலம் குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்க நெய் உதவுகிறது. குளிர்கால நாட்களில் வெதுவெதுப்பான நெய் காபியை வெறும் வயிற்றில் குடிப்பது செரிமான ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்
நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க
நெய்யில் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. மேலும், இதில் வைட்டமின் ஏ, ஈ ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது இவை உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், நோய்த்தொற்றுக்களை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது
சூடாக வைத்திருக்க
குளிர்ந்த காலநிலையில் நெய் காபி ஒரு இனிமையான, வெப்பமான உணர்வைத் தருகிறது. இதன் செழுமையான, கிரீமி அமைப்பு குளிர்காலத்தில் ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது. இது உடல் மற்றும் மனதை ரிலாக்ஸாக வைக்க உதவுகிறது
ஆற்றல் மேம்பாட்டிற்கு
நெய்யில் உள்ள காஃபின் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிலையான ஆற்றலைத் தருகிறது. இது ஆற்றல் செயலிழப்பை ஏற்படுத்தக்கூடிய வழக்கமான காபியைப் போலல்லாமல், நாள் முழுவதும் ஆற்றல் மேம்பாட்டிற்கு வழிவகுக்கிறது
மன அழுத்தத்தைக் குறைக்க
காலையில் வெதுவெதுப்பான ஒரு கப் நெய் காபி அருந்துவது மனநிலையை மேம்படுத்தவும் மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது. இவை மனத்தெளிவை மேம்படுத்த உதவும்