கோடையில் தேங்காய் பால் குடிப்பது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. இதில், உள்ள சத்துக்கள் உடலின் பல பிரச்சனைகளை நீக்குகிறது. தேங்காய் பால் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி இங்கே பார்க்கலாம்.
சத்துக்கள் நிறைந்தது
கால்சியம், மெக்னீசியம், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் தேங்காய் பாலில் உள்ளன. இது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
எடையை கட்டுப்படுத்தும்
தேங்காய் பால் உடல் எடையை கட்டுப்படுத்த உதவுகிறது. இதில், உள்ள சத்துக்கள் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது.
எலும்புகளை வலுப்படுத்தும்
தேங்காய் பால் கால்சியம் மற்றும் மெக்னீசியத்தின் நல்ல ஆதாரமாக கருதப்படுகிறது. இதை குடிப்பதால் உடலின் எலும்புகள் வலுவடையும்.
நோய் எதிர்ப்பு சக்தி
தேங்காய் பால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. இதில், உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் உடலை தொற்று நோய்களில் இருந்து பாதுகாக்கிறது.
இதயத்திற்கு நல்லது
தேங்காய் பால் இதயத்திற்கு நன்மை பயக்கும். இதை குடிப்பதால் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது. இது மாரடைப்பு அபாயத்தை குறைக்கிறது.
HP அளவை அதிகரிக்கும்
தேங்காய் பால் உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது. மேலும், இதனை குடிப்பதால் உடலில் இரத்த சிவப்பணுக்கள் உருவாகும்.