ஆன்டிஆக்ஸிடன்ட்கள், இரும்புச்சத்து, வைட்டமின் சி மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த, டிராகன் பழம் ஆரோக்கியத்திற்கான ஒரு பொக்கிஷம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதன் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இங்கே பார்க்கலாம்.
நோய் எதிர்ப்பு சக்தி
டிராகன் பழத்தில் வைட்டமின் சி மற்றும் கரோட்டினாய்டுகள் உள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது.
இரத்த சர்க்கரை
டிராகன் பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. சர்க்கரை நோயாளிகளும் இந்த பழத்தை சாப்பிடலாம்.
இதயத்திற்கு நல்லது
டிராகன் பழம் சாப்பிடுவது இதய ஆரோக்கியத்தில் நல்ல விளைவை ஏற்படுத்துகிறது. இதயத் துடிப்பு இயல்பாக இருக்கும் மற்றும் இரத்த ஓட்டம் மேம்படும்.
கொலஸ்ட்ரால் குறையும்
டிராகன் பழம் கொலஸ்ட்ராலைக் குறைக்க வல்லது. இதனை உட்கொள்வதால் அழுக்கு கொலஸ்ட்ரால் வெளியேற்றப்படுகிறது.
மூட்டு வலி நிவாரணம்
மூட்டு வலிக்கும் இந்த பழம் உதவுகிறது. உண்மையில், இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பிற கூறுகள் எலும்புகளை வலுப்படுத்த உதவுகின்றன.
இரத்த சோகை
இப்பழத்தில் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால் உடலில் உள்ள இரத்த சோகையை நீக்குகிறது. இதனை தினமும் சாப்பிட்டு வந்தால் ரத்தசோகை பிரச்சனையும் குணமாகும்.
தோலுக்கு நல்லது
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளதால், டிராகன் பழம் சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதனை, உட்கொள்வதால் சருமம் இளமையாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.