டேன்டேலியன் டீ குடிப்பதில் இத்தனை நன்மைகள் இருக்கா?

By Gowthami Subramani
25 Sep 2024, 08:24 IST

சீமை காட்டுமுள்ளங்கியின் இலை அல்லது வேரை கொண்டு தயாரிக்கப்படும் டீ ஆனது டேன்டேலியன் டீ எனப்படுகிறது. இது உடல் ஆரோக்கியத்திற்குப் பல்வேறு நன்மைகளைத் தருகிறது

செரிமான ஆரோக்கியத்திற்கு

டேன்டேலியன் டீ பசியை மேம்படுத்தவும், சிறிய செரிமான பிரச்சனைகளை ஆற்றவும் உதவுகிறது

இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த

இது பொட்டாசியத்தின் மூலமாகும். எனவே இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், நச்சுகளை வடிகட்ட சிறுநீரகத்தின் திறனை மேம்படுத்தவும் உதவுகிறது

கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த

டேன்டேலியனில் பாலிசாக்கரைடுகள் உள்ளது. இவை கல்லீரலில் அழுத்தத்தைக் குறைக்கவும், பித்தத்தை உற்பத்தி செய்யும் திறனை ஆதரிக்கவும் உதவுகிறது

நோயெதிர்ப்பு செயல்பாட்டிற்கு

டேன்டேலியன் டீ வைட்டமின் சி-ன் நல்ல மூலமாகும். இது உடலில் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரிக்கவும், பல்வேறு நோய்த்தொற்றுக்களிலிருந்து விடுபடவும் உதவுகிறது

அழற்சி எதிர்ப்பு

டேன்டேலியனில் டாராக்சாஸ்டெரால் உள்ளது. இதன் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் வீக்கத்தைக் குறைக்கவும், வெள்ளை இரத்த அணுக்களை ஒழுங்குபடுத்தவும் உதவுகிறது

சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள்

டேன்டேலியன் டீயில் உள்ள நொதிகள் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அகற்ற உதவுகிறது

குறிப்பு

டேன்டேலியன் டீ அருந்துவது சிலருக்கு ஒவ்வாமை, வயிற்று அசௌகரியம், வயிற்றுப்போக்கு அல்லது நெஞ்செரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்தலாம்