கிராம்பு எண்ணெயில் இத்தனை நன்மைகள் இருக்கா?

By Gowthami Subramani
06 Aug 2024, 13:30 IST

கிராம்பு எண்ணெய் பல நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான இயற்கை மருந்தாகக் கருதப்படுகிறது. இதில் கிராம்பு எண்ணெய் தரும் நன்மைகளைக் காணலாம்

ஊட்டச்சத்துக்கள்

கிராம்பு எண்ணெயில் நுண்ணுயிர் எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு, கிருமி நாசினிகள், வைரஸ் எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் போன்றவை உள்ளது. இந்தப் பண்புகள் பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

தலைவலி பிரச்சனைக்கு

கிராம்பு எண்ணெயின் வாசனை மற்றும் அதன் பண்புகள் தலைவலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. இது மன அழுத்தத்தைப் போக்க உதவுகிறது. இதற்கு கிராம்பு எண்ணெயை தேங்காய் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெயில் கலந்து மசாஜ் செய்யலாம்

வாய் துர்நாற்றத்திற்கு

கிராம்பு எண்ணெய் வாய் துர்நாற்றத்தை போக்க உதவுகிறது. இதன் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் வாயில் உள்ள பாக்டீரியாக்களை நீக்கி துர்நாற்றத்தை நீக்குகிறது

நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிக்க

கிராம்பு எண்ணெயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களுடன் எதிர்த்துப் போராடி வலுவான நோயெதிர்ப்புச் சக்தியை வழங்குகிறது. மேலும் கல்லீரல் நோய்கள், இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்ற பல நாள்பட்ட நோய்களைத் தவிர்க்கலாம்

சுவாச பிரச்சனைக்கு

இருமல், சளி, ஆஸ்துமா மற்றும் சைனசிடிஸ் போன்ற சுவாச பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க கிராம்பு எண்ணெய் உதவுகிறது

பல் வலி நீங்க

கிராம்பு எண்ணெயில் யூஜெனோல் என்ற ஒரு பொருள் உள்ளது. இது ஒரு இயற்கையான வலி நிவாரணியாக செயல்பட்டு பல் வலியிலிருந்து நிவாரணம் தருகிறது

பூஞ்சைத் தொற்றைத் தவிர்க்க

கிராம்பு எண்ணெயில் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது தோல் பூஞ்சை தொற்றுகளை அகற்றவும்,  ஒவ்வாமையால் ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சலிலிருந்து நிவாரணம் அளிக்கிறது