சியா விதைகள் அதன் ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் நன்மைகளுக்காக அறியப்படுகிறது. ஆனால், இது குழந்தைகளுக்கு ஆரோக்கியமானதா? என்பதை யோசித்ததுண்டா?
ஊட்டச்சத்துக்கள்
சியா விதைகளில் புரதம், நார்ச்சத்து மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்
மூளை ஆரோக்கியத்திற்கு
சியா விதைகள் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த சிறந்த மூலமாகும். இது மூளை ஆரோக்கியம் மற்றும் சிந்திக்கும் திறனை மேம்படுத்த உதவுகிறது
திசுக்களின் வளர்ச்சிக்கு
சியா விதைகளில் நல்ல அளவு புரதம் நிறைந்துள்ளது. இவை குழந்தைகளின் திசுக்களின் வளர்ச்சி மற்றும் பழுதுபார்க்க உதவுகிறது
உடல் எடையைக் கட்டுப்படுத்த
சியா விதைகளில் அதிக நார்ச்சத்துக்கள் உள்ளது. இவை குழந்தையின் செரிமான அமைப்பை மேம்படுத்துவதன் மூலம் மலச்சிக்கலை தடுக்கிறது. மேலும் இது நீண்ட நேரம் நிறைவான உணர்வைத் தந்து உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது
பயன்படுத்த எளிதானது
சியா விதைகளை குழந்தைகளின் உணவில் ஸ்மூத்தி, தயிர் அல்லது ஓட்மீல் போன்ற வழிகளில் சேர்க்கலம். இது அவர்களின் ஊட்டச்சத்து மதிப்பை அதிகரிக்க உதவுகிறது
குறிப்பு
குழந்தைக்கு ஏதேனும் ஒவ்வாமை அல்லது செரிமான பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக் கொள்வது அவசியமாகும். இதற்கு சிறிய அளவுடன் தொடங்கி, குழந்தைக்கு என்ன மாற்றங்கள் ஏற்படுகிறது என்பதைக் கவனிக்கலாம். அசாதாரணமான மாற்றங்களைக் கண்டால், மருத்துவ ஆலோசனை பெறலாம்