வெற்றிலை வைட்டமின் சி, தியாமின், நியாசின், ரிபோஃப்ளேவின் மற்றும் கரோட்டின் போன்ற வைட்டமின்கள் மற்றும் கால்சியம் நிறைந்த மூலமாகும். இதை உட்கொள்வது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது
உடல் எடையிழப்புக்கு
எடையைக் குறைக்க முயற்சிப்பவர்கள் வெற்றிலையைத் திறம்பட பயன்படுத்தலாம். இது உடல் எடையைக் குறைக்கவும், உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவுகிறது
நீரிழிவு சிகிச்சைக்கு
வெற்றிலையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவுகிறது. இதன் மூலம் நீரிழிவு நோய்க்கு மிகுந்த நன்மை பயக்கும்
காயங்களை ஆற்றுவதற்கு
காயம் இருக்கும் இடத்தில் வெற்றிலையைத் தடவி, கட்டு கட்டுவதன் மூலம் காயம் குணமாகி, குணப்படுத்தும் செயல்முறையைத் துரிதப்படுத்துகிறது. இது ஆயுர்வேதத்தில் புண்களுக்கு சிகிச்சையளிப்பதற்குப் பயன்படுத்துகிறது
தலைவலி குணமாக
கடுமையான தலைவலியால் பாதிக்கப்பட்டிருப்பின், வெற்றிலை பெரிதும் உதவுகிறது. வெற்றிலையை வெளிப்புறமாகப் பயன்படுத்தும்போது இதன் குளிர்ச்சியான பண்புகள் வலியிலிருந்து உடனடி நிவாரணம் அளிக்கிறது
புற்றுநோயைத் தடுக்க
வெற்றிலையை மென்று சாப்பிடுவது, உமிழ்நீரில் உள்ள அஸ்கார்பிக் அமிலத்தின் அளவை பராமரித்து வாய்வழி புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது