வெல்லம் மற்றும் கொண்டைக்கடலை கலவையானது குர் சனா எனப்படுகிறது. இது ஒரு பிரபலமான மற்றும் சத்தான கலவையாகும். இதை உட்கொள்வது பல ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. இதில் கொண்டைக்கடலையுடன் வெல்லம் சேர்த்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்
ஊட்டச்சத்துக்கள்
கொண்டைக்கடலையில் புரதம், நார்ச்சத்து மற்றும் அத்தியாவசிய தாதுக்கள் நிறைந்துள்ளது. அதே சமயம், வெல்லம் ஒரு இயற்கையான இனிப்பாகும். இதில் வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளது. இந்த இரண்டின் கலவையானது சுவை மற்றும் ஊட்டச்சத்தின் சமநிலையை உருவாக்குகிறது
எடை இழப்புக்கு
கொண்டைக்கடலையில் உள்ள நார்ச்சத்துக்கள், நீண்ட நேரம் வயிறு நிரப்பிய உணர்வைத் தந்து, ஜங்க் ஃபுட் உட்கொள்வதற்கான ஏக்கத்தைக் குறைக்கிறது. அதே சமயம், வெல்லம் சர்க்கரை பசியை ஆரோக்கியமான முறையில் பூர்த்தி செய்கிறது
இயற்கை ஆற்றலைத் தர
கொண்டைக்கடலை, வெல்லம் கலவையானது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. வெல்லம் இயற்கையான இனிப்பின் சிறந்த மூலமாகும். இது உடலுக்கு உடனடி ஆற்றலை அளிப்பதன் மூலம் நாள் முழுவதும் ஆற்றலைப் பராமரிக்கிறது
செரிமான ஆரோக்கியத்திற்கு
வெல்லம், கொண்டைக்கடலை இரண்டுமே செரிமானத்திற்கு சிறந்தவையாகும். கொண்டைக்கடலையில் உள்ள நார்ச்சத்துக்கள் செரிமானத்திற்கு உதவுவதன் மூலம், மலச்சிக்கலைத் தடுக்கிறது. மேலும் வெல்லம் உடலில் செரிமான நொதிகளை உற்பத்தி செய்வதன் மூலம்செரிமானத்தை மேம்படுத்துகிறது
எலும்புகளை வலுவாக்க
சன்னா, வெல்லம் இரண்டும் கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்களால் நிறைந்ததாகும். இது வலுவான எலும்புகள் மற்றும் பற்களைப் பராமரிக்க அவசியமானதாகும்
பளபளப்பான சருமத்திற்கு
வெல்லம் முதுமையைத் தடுக்கும் பண்புகளைக் கொண்டதாகும். மேலும் இது கிளைகோலிக் அமிலத்தின் சிறந்த மூலமாகும். இந்த கிளைகோலிக் அமிலம் சருமத்தை நேர்த்தியான கோடுகள், சுருக்கங்கள் மற்றும் முகப்பரு போன்ற பிரச்சனைகளிலிருந்து விலக்கி வைக்கிறது
மூளையை கூர்மையாக்க
வெல்லத்தில் நினைவாற்றலை மேம்படுத்த தேவையான வைட்டமின் பி6 ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. மேலும் இதில் உள்ள வைட்டமின் பி மற்றும் ஃபோலேட் போன்றவை மூளையைக் கூர்மைப்படுத்த உதவுகிறது