ஜீனியை விட பிரவுன் சுகர் ஆரோக்கியத்திற்கு நல்லதா?

By Devaki Jeganathan
13 Oct 2024, 21:13 IST

தற்போது வெள்ளை சர்க்கரையை விட, நாட்டு சர்க்கரை, பழுப்பு சர்க்கரை என அழைக்கப்படும் பிரவுன் சுகரின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதன் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

செரிமான பிரச்சினை

வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக பிரவுன் சுகர் பயன்படுத்தினால், அது உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். செரிமான பிரச்சனைக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.

மாதவிடாய் வலி

மாதவிடாய் காலத்தில் பெண்கள் அதிக வலியை சந்திக்க நேரிடும். இந்நிலையில், பிரவுன் சர்க்கரை சாப்பிடுவதால் வலியிலிருந்து நிவாரணம் பெறலாம்.

சரும ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்திற்கு மட்டும் அல்ல, பிரவுன் சுகர் சரும ஆரோக்கியத்திற்கும் நன்மைபயக்கும். இதனால் சருமம் பொலிவடைவதோடு, ஸ்க்ரப்பராகவும் பயன்படுத்தலாம்.

எடை குறைப்பு

அதிகப்படியான சர்க்கரையை உட்கொள்வது நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். ஆனால், நீங்கள் பிரவுன் சுகரையை பயன்படுத்தினால், உங்களின் உடல் எடையைக் குறைக்க உதவும்.

பாக்டீரியா தொற்று

பழுப்பு சர்க்கரையில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் பல வகையான நோய்த்தொற்றுகளிலிருந்து உங்களைப் பாதுகாக்க உதவுகிறது. இதனால் சளி, இருமல் பிரச்சனையும் நீங்கும்.

ஆற்றலை அதிகரிப்பு

பிரவுன் சுகர் சாப்பிடுவதால் உடலில் ஆற்றல் குறைபாடு ஏற்படாது. வெள்ளைச் சர்க்கரையைப் போலவே இதுவும் ஆற்றல் நிறைந்தது.

வளர்சிதை மாற்றம்

பிரவுன் சுகரில் உள்ள பண்புகள் உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. உடல் எடையை குறைப்பதற்கும், ஆரோக்கியமாக இருப்பதற்கும் இது உதவியாக இருக்கும்.