கருப்பு ஆலிவ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

By Gowthami Subramani
12 Aug 2024, 10:52 IST

பச்சை ஆலிவ் நாம் கேள்விப்பட்டிருப்போம். கருப்பு ஆலிவ் பற்றி தெரியுமா? கருப்பு, பச்சை ஆலிவ் இரண்டுமே மிகவும் சத்தானவையாகும். இதில் கருப்பு ஆலிவ் உட்கொள்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காணலாம்

எடை மேலாண்மைக்கு

கருப்பு ஆலிவ் ஆனது குறைந்த கலோரிகள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்ததாகக் கருதப்படுகிறது. இது எடை மேலாண்மைக்கு உதவும் சிறந்த சிற்றுண்டியாகும்

இதய ஆரோக்கியத்திற்கு

கருப்பு ஆலிவ்களில் உள்ள மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் உடலில் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைத்து, நல்ல கொழுப்பின் அளவைப் பராமரிக்கிறது. இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

வீக்கத்தைக் குறைக்க

கருப்பு ஆலிவ்களில் பாலிபினால்கள் மற்றும் வைட்டமின் ஈ போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இவை உடலை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து பாதுகாக்கவும் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது

செரிமான ஆரோக்கியத்திற்கு

கருப்பு ஆலிவ்களில் உள்ள நார்ச்சத்துக்கள் சீரான குடல் இயக்கத்தை ஊக்குவித்து, மலச்சிக்கல்லைத் தடுக்கிறது. இவ்வாறு செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

ஹீமோகுளோபின் உற்பத்திக்கு

இந்த ஆலிவ் பழத்தில் இரும்புச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது ஹீமோகுளோபின் உற்பத்திக்கு அவசியமாகும். இவை இரத்த சிவப்பணுக்களில் உள்ள புரதமாகும். மேலும் இது உடல் முழுவதும் ஆக்ஸிஜனைக் கொண்டு செல்கிறது

எலும்பு ஆரோக்கியத்திற்கு

ஆலிவ் பழத்தில் வைட்டமின் டி மற்றும் கால்சியம் போன்றவை நிறைந்துள்ளது. இவை இரண்டும் வலுவான மற்றும் ஆரோக்கியமான எலும்புகளை பராமரிக்க உதவுகிறது

சரும ஆரோக்கியத்திற்கு

இந்த பழத்தில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் வைட்டமின் ஈ போன்றவை சருமத்திற்கு ஊட்டமளித்து, சருமத்தை மென்மையாக மற்றும் நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது