அன்றாட உணவுகளில் அடிக்கடி கவனிக்கப்படாத ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகளில் ஒன்று கருப்பு கேரட் ஆகும். இது வைட்டமின்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்ததாகும். இவை பலவிதமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. இதில் கருப்பு கேரட் தரும் நன்மைகளைக் காணலாம்
நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க
கருப்பு கேரட் வைட்டமின் சி உள்ளடக்கம் நிறைந்ததாகும். இது உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் இது பல்வேறு நோய்த்தொற்றுக்களை எதிர்த்துப் போராட உதவுகிறது
இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த
கருப்பு கேரட் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டதாகும். இது நீரிழிவு நோயை நிர்வகிக்க இது ஒரு சிறந்த தேர்வாகும்
ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்த
கருப்பு கேரட்டில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், அந்தோசயினின்கள் நிறைந்துள்ளது. இவை சேதத்திலிருந்து பாதுகாக்க மற்றும் நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது
கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த
இதில் அதிக அளவு பீட்டா கரோட்டீன் நிறைந்துள்ளது. இது கண் ஆரோக்கியத்தை ஆதரிக்கவும், வயது தொடர்பான கண்பார்வை சிக்கல்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது
சரும ஆரோக்கியத்திற்கு
கருப்பு கேரட்டில் வைட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இவை சருமத்தின் அமைப்பை மேம்படுத்தவும், முதுமை அறிகுறிகளைக் குறைக்கவும் உதவுகிறது