பிரியாணி இலையில் கொட்டிக்கிடக்கும் ஆரோக்கிய நன்மைகள்

By Gowthami Subramani
11 Sep 2024, 09:07 IST

சமையலில் கூடுதல் நறுமணத்திற்காக சேர்க்கப்படும் பொருள்களில் பிரியாணி இலையும் ஒன்று. இதனை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது பலவிதமான ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது

செரிமானத்திற்கு

இது புரதங்களை உடைத்து உணவை ஜீரணிக்க உதவும் நொதிகளைக் கொண்டுள்ளது. இவை அஜீரணத்திற்கு உதவுகிறது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், அழற்சி எதிர்ப்பு மருந்துகள் போன்றவை அல்சர் போன்ற செரிமான கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது

நோயெதிர்ப்பு அமைப்பு

பிரியாணி இலைகளில் வைட்டமின்கள் ஏ, பி6 மற்றும் சி போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இவை உடலில் ஆரோக்கியமான நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரிக்க உதவுகிறது

கேண்டிடா தொற்று

இது செல் சுவர்களில் கேண்டிடாவின் ஒட்டுதலை சீர்குலைக்கிறது. இதன் மூலம் கேண்டிடா நோய்த்தொற்று ஏற்படுவதைத் தடுக்க உதவுகிறது

நீரிழிவு நோய்க்கு

சில ஆய்வுகளில் இந்த இலைகளில் தயாரிக்கப்படு தேநீரை அருந்துவது அல்லது அரைத்த பிரியாணி இலை காப்ஸ்யூல்களை எடுத்துக்கொள்வது இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதாகக் கூறப்படுகிறது

காயம் குணமாக

பிரியாணி இலைகள் காயங்களை குணப்படுத்த உதவுவதாகக் கூறப்படுகிறது. எனினும், இது வேறு சில சாறுகளைப் போல பயனுள்ளதாக இருக்காது

மன அழுத்தத்திற்கு

பிரியாணி இலைகள் குறைவான கவலை, மனச்சோர்வு மற்றும் மன அழுத்தத்தைக் காட்டுவதாக ஆய்வு ஒன்றில் கூறப்படுகிறது