குளிர்காலத்தில் ஆப்பிள் சாப்பிடுவது எவ்வளவு நல்லது தெரியுமா?

By Gowthami Subramani
12 Dec 2024, 16:51 IST

குளிர்காலத்தில் ஆப்பிள் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும். இதற்கு ஆப்பிளில் வைட்டமின் சி, நார்ச்சத்துக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்றவையே காரணமாகும். இதில் குளிர்காலத்தில் ஆப்பிள் உட்கொள்வதன் நன்மைகளைக் காணலாம்

எடை மேலாண்மைக்கு

ஆப்பிளில் குறைந்த கலோரிகள் மற்றும் அதிக நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதை உட்கொள்வது நீண்ட நேரம் முழுமையாக வைத்திருப்பதன் மூலம் எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது

இதய ஆரோக்கியத்திற்கு

ஆப்பிள்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இவை இதய நோயுடன் தொடர்பான ஆபத்து காரணிகளைக் குறைப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது

நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிக்க

ஆப்பிளில் வைட்டமின் சி உள்ளது. இது சளி மற்றும் காய்ச்சல் காலங்களில் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரிக்க உதவுகிறது. இந்த ஊட்டச்சத்துக்கள் நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடவும், நோய்களைத் தடுக்கவும் உதவுகிறது

செரிமான ஆரோக்கியத்திற்கு

ஆப்பிளில் உள்ள நார்ச்சத்துக்கள் செரிமான ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இது மலச்சிக்கல் போன்ற பொதுவான குளிர்கால செரிமான பிரச்சனைகளை சமாளிக்க உதவுகிறது

ஆற்றலை அதிகரிக்க

ஆப்பிளில் உள்ள இயற்கை சர்க்கரைகள் விரைவான ஆற்றல் ஊக்கத்தை அளிக்கிறது. இவை குளிர்கால மந்தமான நிலையை எதிர்த்துப் போராட உதவுகிறது

வாய் ஆரோக்கியத்திற்கு

ஆப்பிள்களை மெல்லுவது உமிழ்நீர் உற்பத்தியைத் தூண்ட உதவுகிறது. இது வாய்வழி பாக்டீரியாவைக் குறைக்கவும், வாய்வழி சுகாதாரத்தை பராமரிக்கவும் உதவுகிறது

நீரேற்றமிக்க பழம்

ஆப்பிள் அதிக நீர் உள்ளடக்கம் நிறைந்த ஆதாரமாகும். இது நீரேற்ற அளவைப் பராமரிக்க உதவுகிறது. குறிப்பாக, குளிர்காலத்தில் வறண்ட காற்று காரணமாக நீரிழப்பைத் தவிர்க்க இது பெரிதும் உதவுகிறது