அதிகளவு யூரிக் அமில பிரச்சனை இன்று பலரும் சந்திக்கும் பொதுவான பிரச்சனையாகும். இது வீக்கம், மூட்டு வலி போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். இதற்கு சிறந்த தீர்வாக ஆப்பிள் சைடர் வினிகர் உதவுகிறது. அதிக யூரிக் அமில அளவுக்கு ஆப்பிள் சைடர் வினிகர் எவ்வாறு உதவுகிறது என்பதைக் காண்போம்
யூரிக் அமிலம்
உணவுகளில் உள்ள பியூரின்களை உடைப்பதால் ஏற்படும் இயற்கையான கழிவுப் பொருளே யூரிக் அமிலம் ஆகும். இதன் அளவு அதிகரிக்கும் போது, கீல்வாதம் அல்லது சிறுநீரகக் கற்களுக்கு வழிவகுக்கலாம்
ஏன் ஆப்பிள் சைடர் வினிகர்?
ஆப்பிள் சைடர் வினிகரில் நச்சு நீக்கும் பண்புகள் நிறைந்துள்ளது. இது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உடலில் pH அளவை சமநிலைப்படுத்தும் திறனுக்காக நன்கு அறியப்படுகிறது
அதிக யூரிக் அமிலத்தை வெளியேற்ற
யூரிக் அமில மேலாண்மையில் ஆப்பிள் சைடர் வினிகரானது சிறுநீரக செயல்பாடு மற்றும் நச்சு நீக்கத்தை மேம்படுத்துகிறது. இதன் மூலம் அதிகப்படியான யூரிக் அமிலத்தை வெளியேற்ற உதவுகிறது
அசிட்டிக் அமிலம் நிறைந்த ACV
ஆப்பிள் சைடர் வினிகரில் உள்ள அசிட்டிக் அமிலம் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. இவை யூரிக் அமிலத்தை நிர்வகிக்க உதவுகிறது
காரத்தன்மை நிறைந்த
ஆப்பிள் சைடர் வினிகரானது உடலை காரமாக்க உதவுகிறது. இது உடலின் pH அளவை சமநிலைப்படுத்த உதவுகிறது. இதில் அமிலத்தன்மை குறைவாக இருக்கும். இது யூரிக் அமில அளவு குறைய உதவுகிறது
எப்படி எடுத்துக் கொள்வது?
ஒரு கிளாஸ் தண்ணீரில் 1-2 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை நீர்த்துப் போகச் செய்து தினமும் குடிக்க வேண்டும். பற்கள், வயிற்றைப் பாதுகாக்க எப்போதும் நீர்த்துப் போகச் செய்வது அவசியமாகும்