உப்பு சேர்த்த நெல்லிக்காய் சாப்பிடுவதில் இத்தனை நன்மைகளா?

By Gowthami Subramani
23 Dec 2024, 17:54 IST

பொதுவாக நெல்லிக்காய் உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்குப் பல்வேறு நன்மைகளைத் தரக்கூடியதாகும். இதனுடன் உப்பு சேர்த்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் சிலவற்றைக் காணலாம்

ஊட்டச்சத்துக்கள்

இந்த கசப்பான மற்றும் சற்று புளிப்பான பழத்தில் வைட்டமின் சி, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. கூடுதலாக, நெல்லிக்காயுடன் உப்பு சேர்த்து உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்

எடை குறைய

வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாற்றில் ஒரு சிட்டிகை உப்பு மற்றும் மிளகு சேர்த்துக் குடிப்பது எடையைக் குறைக்க உதவுகிறது

இரத்தச் சர்க்கரை குறைய

ஆம்லாவில் குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் குறியீடு உள்ளது. இதை உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும்

செரிமான ஆரோக்கியத்திற்கு

ஆம்லாவில் வைட்டமின் சி, நார்ச்சத்துக்கள் போன்றவை அதிகம் உள்ளது. இது செரிமானம், வளர்சிதை மாற்றம் மற்றும் எடை மேலாண்மைக்கு உதவுகிறது. மேலும், இது நீண்ட நேரத்திற்கு வயிறு நிரம்பிய உணர்வைத் தருகிறது

நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிக்க

ஆம்லாவில் உள்ள வைட்டமின் சி ஊட்டச்சத்துக்கள், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது

சரும ஆரோக்கியத்திற்கு

ஆம்லா உட்கொள்வது சருமத்தை பிரகாசமாக்கவும், இரத்தத்தை சுத்தப்படுத்தவும் உதவுகிறது. இதில் உள்ள அதிகளவிலான வைட்டமின் சி சருமம் கொலாஜனை உருவாக்கி மென்மையாகவும் புத்துணர்ச்சியுடனும் வைக்க உதவுகிறது