கண் பார்வை தெளிவா தெரிய நெல்லிக்காயை இப்படி சாப்பிடுங்க.

By Gowthami Subramani
03 Jan 2024, 12:16 IST

நெல்லிக்காயை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல், கண் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். ஆயுர்வேதத்தில் சிறந்து விளங்கும் நெல்லிக்காய் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளுக்கு மருந்தாக செயல்படுகிறது

ஊட்டச்சத்துக்கள்

நெல்லிக்காயில் வைட்டமின் சி, பாஸ்பரஸ், இரும்பு, கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும், இதில் நுண்ணுயிர் எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு மற்றும் வைரஸ் தடுப்பு பண்புகளைக் கொண்டுள்ளது

கண் ஆரோக்கியத்திற்கு

கண் ஆரோக்கியத்தை வலுப்படுத்தவும், பார்வையை மேம்படுத்தவும் நெல்லிக்காய் உதவுகிறது. இதற்கு இதில் உள்ள வைட்டமின் ஏ, பி, சி போன்றவையே காரணமாகும்

எப்படி சாப்பிடலாம்?

தினமும் காலையில் 1-2 முழு நெல்லிக்காயை நேரடியாக உட்கொள்ளலாம். இல்லையெனில் தண்ணீரில் கொதிக்க வைத்து சாப்பிடலாம். இது செரிமானத்தை எளிதாக்குகிறது

ஆம்லா பொடி

நெல்லிக்காயை உணவில் சேர்க்க, எளிய வழியாக பொடியாக எடுத்துக் கொள்ளலாம். 1 தேக்கரண்டி நெல்லிக்காய் பொடியை சம அளவு தேனுடன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளலாம்

ஆம்லா ஜூஸ்

ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் 20 மில்லி அளவிலான ஆம்லா சாற்றைக் கலந்து காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ளலாம்

இந்த வழிகளில் நெல்லிக்காயை உட்கொள்வது கண் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்