நீங்க கட்டாயம் சாப்பிட வேண்டிய இரும்புச்சத்து நிறைந்த வெஜ் உணவுகள்

By Gowthami Subramani
24 May 2025, 20:52 IST

உடலில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுவதால் பல்வேறு அறிகுறிகள் தோன்றலாம். இது பலவீனம், தொடர்ச்சியான சோர்வு போன்றவை முக்கிய அறிகுறிகளாகக் காணப்படுகிறது. இதைத் தவிர்க்க, சப்ளிமெண்ட்களை எடுத்துக் கொள்ளும் முன்பாக இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளலாம்

கீரை

இது குறைந்த கலோரிகள், அதிக இரும்புச்சத்துக்கள் உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. இது அன்றாட உணவில் சேர்க்க வேண்டிய சிறந்த சைவ உணவாகும். மேலும் இதில் வைட்டமின் சி நிறைந்திருப்பதால் இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

பூசணி விதைகள்

பூசணி விதைகளில் வைட்டமின் கே, துத்தநாகம், மாங்கனீசு மற்றும் மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதை சிற்றுண்டியாக சாப்பிடுவது உடலில் இரும்பு மற்றும் மெக்னீசியம் அளவை அதிகரிக்க உதவுகிறது

ப்ரோக்கோலி

ப்ரோக்கோலி இரும்புச்சத்து உறிஞ்சுதலையும் நோயெதிர்ப்பு மண்டலத்தையும் பாதிக்கிறது. ஏனெனில், இது வைட்டமின் சி-ன் வளமான ஆதாரங்களில் ஒன்றாகும். மேலும் இதில் ஃபோலேட், வைட்டமின் கே மற்றும் நார்ச்சத்துக்களும் உள்ளது

பருப்பு வகைகள்

பருப்பு வகைகளில் ஃபோலேட், மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் போன்றவை நிறைந்துள்ளது. இதன் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் நீண்ட நேரம் முழுதாக வைத்திருக்க உதவுகிறது

டார்க் சாக்லேட்

இனிப்பு வகையான டார்க் சாக்லேட் இரும்புச்சத்துக்கள் நிறைந்ததாகும். மேலும் இதில் ப்ரீபயாடிக் நார்ச்சத்துக்களைக் கொண்டுள்ளது. எனவே இது குடலுக்கு ஏற்றதாகும்

டோஃபு

டோஃபுவில் ஆரோக்கியமான அளவிலான இரும்புச்சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் இதில் நல்ல அளவிலான புரதம் காணப்படுகிறது. கூடுதலாக, இது பசையம் இல்லாதது மற்றும் லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாத எவருக்கும் சிறந்ததாகும்