அனிமியாவைத் தடுக்க சாப்பிட வேண்டிய காய்கறிகள்

By Gowthami Subramani
16 Sep 2024, 08:44 IST

இரும்புச்சத்து குறைபாட்டால் அனிமியா என்ற இரத்த சோகை ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்க இரும்புச்சத்து நிறைந்த சில ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். இதில் இரத்த சோகை குணமாக உதவும் காய்கறிகளைக் காணலாம்

பீட்ரூட்

இது இரும்புச்சத்து நிறைந்த நல்ல மூலமாகும். இது ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது. இதனை சாலட்கள் அல்லது வறுத்த உணவுகளுக்கு கூடுதல் சத்தாக வழங்குகிறது

கீரை

பச்சை இலைக் காய்கறி இரும்புச்சத்து நிறைந்ததாகும். சமைத்த கீரையில் பச்சையாக இருப்பதை விட அதிக இரும்புச்சத்து நிறைந்திருக்கும். இது இதயம், எலும்பு மற்றும் செரிமான ஆரோக்கியத்திற்கு நல்லது

பட்டாணி

இது இரும்புச்சத்து நிறைந்த உணவாகும். இதை பாஸ்தா, சூப்கள் அல்லது ஸ்டிர்-ஃப்ரைஸ் போன்றவற்றில் சேர்க்கலாம்

ப்ரோக்கோலி

ப்ரோக்கோலியில் அதிக அளவு இரும்புச்சத்து உள்ளது. இதில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. மேலும் இதன் அழற்சி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்ற பண்புகள் இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது

உருளைக்கிழங்கு

தோலுடன் கூடிய உருளைக்கிழங்கு இரும்புச்சத்துக்கான நல்ல மூலமாக அமைகிறது. இது நார்ச்சத்துக்கள் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை ஆதரிக்கும் பிற ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது