இந்த இந்திய உணவுகளை நீங்கள் தினமும் சாப்பிட்டு வந்தாலே போதும்.. நீங்கள் ஆரோக்கியமாக இருப்பீர்கள்.. அது என்னவென்று இங்கே காண்போம்.
பருப்பு வகை
பருப்பு வகையில் வைட்டமின் பி, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்துகள் நிறைந்துள்ளன. இவை ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இன்றியமையாதவை.
வெந்தயம்
வெந்தய விதைகளில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இது பசியை கட்டுப்படுத்துகிறது. இதனால் எடை கட்டுக்குள் இருக்கும். மேலும் இது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
மஞ்சள்
கீழ்வாதத்திற்கு சிறந்த மருந்தாக மஞ்சள் திகழ்கிறது. மேலும் இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.
நெல்லிக்காய்
நெல்லிக்காயில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது குடல் இயக்கத்தை சீராக்கவும், சருமம் மற்றும் முடியை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது.
தினை
உடல் எடை மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க தினை உதவுகிறது.
சீரகம்
இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், செரிமானத்தை மேம்படுத்தவும் சீரகம் சிறந்து திகழ்கிறது.
கறிவேப்பிலை
இதய நோய், வயது தொடர்பான நரம்பு மண்டல பிரச்னைகள், நீரிழிவு, சிறுநீரக நோய் போன்றவற்றை கட்டுப்படுத்த கறிவேப்பிலை உதவுகிறது.