வாழைப்பழ தோல் நன்மைகள்
வாழைப்பழத்தை சாப்பிட்டு குப்பையில் தோலை போடுவது அனைவரின் வழக்கம். ஆனால் விவரம் தெரிந்தவர்கள் அப்படி செய்ய மாட்டார்கள்.
தோலில் நிறைந்துள்ள நன்மைகள்
வாழைப்பழம் அனைத்து காலங்களுக்கும் பயனுள்ள பழமாகும். இது மலிவானது மற்றும் அனைவரும் அணுகக் கூடியது ஆகும். இந்த பழத்தில் மட்டுமல்ல தோலிலும் நிறைய நன்மைகள் இருக்கிறது.
புற்றுநோய் நீங்கும்
வாழைப்பழ தோலில் பாலிபினால்கள், கரோட்டினாய்டுகள், ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. இது புற்றுநோயை உண்டாக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களில் இருந்து பாதுகாக்கிறது.
சருமம் மற்றும் கொலஸ்ட்ரால்
சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், உடலில் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தவும் இது உதவுகிறது. இதய நோய்களின் ஆபத்தும் குறையும்.
கண்களுக்கு நல்லது
வாழைப்பழ தோலில் உள்ள சத்துக்கள் கண் ஆரோக்கியத்திற்கு நல்லது. கண்புரை ஏற்படும் வாய்ப்பை குறைக்கும்.
வாழைப்பழத் தோலை எப்படி சாப்பிடுவது?
வாழைப்பழத் தோலில் கூட்டு செய்தும், சட்னி செய்தும், ஜாம் செய்தும் சாப்பிடலாம். இதற்கான ரெசிபிக்கள் சமூகவலைதளங்களில் நிறைய உள்ளது.