வேகன் டயட் உணவுகளைப் பின்பற்றுவது உடல் ஆரோக்கியத்திற்குப் பல்வேறு நன்மைகளைத் தருகிறது. இதில் வேகன் டயட் இருப்பதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்
எடையிழப்புக்கு
இறைச்சி உண்பவர்களுடன் ஒப்பிடுகையில் சைவ உணவு உண்பவர்களுக்கு உடல் பருமனாவதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது
நீரிழிவு நோய்க்கு
வேகன் டயட் உணவுமுறை டைப் 2 நீரிழிவு நோய்க்கு எதிரான பாதுகாப்பை வழங்குகிறது. ஏனெனில் இதில் சர்க்கரை குறைவாக உள்ளது
இதய ஆரோக்கியத்திற்கு
சைவ உணவுகளில் உள்ள ஆக்ஸிஜனேற்றங்கள் இதய ஆரோக்கியத்தைப் பராமரிக்கிறது. அதே சமயம், விலங்குகளிலிருந்து பெறப்பட்ட உணவுகளை உட்கொள்வதால் நீரிழிவு, உடல் பருமன், பக்கவாதம் போன்றவை ஏற்பட அதிக வாய்ப்புள்ளது
புற்றுநோயைத் தடுக்க
இறைச்சி உண்பவர்களை விட, சைவ உணவு உட்கொள்பவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் விகிதம் குறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக பெருங்குடன், மார்பக புற்றுநோய் அபாயத்தைக் குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன
குடல் ஆரோக்கியத்திற்கு
வேகன் டயட் உணவுகள் நார்ச்சத்துக்கள் நிறைந்ததாகும். இந்த நார்ச்சத்துக்கள் உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கவும், குடலியக்கத்தை நிர்வகிக்கவும் உதவுகிறது
நாள்பட்ட நோய்கள் குறைவு
வேகன் டயட் உணவுமுறைகள் மூலம் நீரிழிவு, உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கலாம்