பெரும்பாலும் நாம் அரிசி கழுவிய பின் அந்த தண்ணீரை வீண் என நினைத்து கீழே கொட்டிவிடுவோம். ஆனால், இந்த நீர் முடி மற்றும் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்பது பலருக்கும் தெரியாது. இதன் நன்மைகள் பற்றி இங்கே பார்க்கலாம்.
ஆற்றலை அதிகரிக்கும்
அரிசி நீரில் உள்ள கார்போஹைட்ரேட் உடலில் சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இது தவிர, தினமும் இதை குடித்து வந்தால் சோர்வு ஏற்படாது.
நீரிழப்பைத் தடுக்கிறது
அரிசி கழுவிய நீர் உடலில் ஏற்படும் நீரிழப்பை தடுக்கும். இதை குடிப்பதால் நாள் முழுவதும் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
வயிற்றுப்போக்கு
வயிற்றுப்போக்கைத் தடுக்க அரிசி கழுவிய தண்ணீரைக் குடிக்கலாம். இதன் நீரை தினமும் குடித்து வர மலச்சிக்கல் நீங்கும். கூடுதலாக, இது செரிமான அமைப்பை மேம்படுத்தும்.
தோலுக்கு நல்லது
அரிசி நீரை முகத்தில் தடவினால், அது ஃபேஸ் வாஷ் போல் வேலை செய்யும். இந்த நீரில் முகத்தை தினமும் இரண்டு முறை கழுவினால் சருமம் பளபளப்பாகும்.
வலுவான முடி
அரிசி கழுவிய நீரை முடிக்கு தடவினால் மிகவும் நன்மை பயக்கும். இந்த நீரில் உள்ள வைட்டமின் ஏ, டி மற்றும் சி முடியை பலப்படுத்துகிறது.
மன அழுத்தம்
அரிசி கழுவிய நீரை குளியல் நீரில் கலந்து குளித்தால் மன அழுத்தம் மற்றும் உடல் சோர்வு நீங்கும்.