தைராய்டு வலி அதிகமாகும் போது என்ன செய்யனும்?

By Devaki Jeganathan
17 Aug 2024, 13:12 IST

தைராய்டு ஹார்மோன் உடலில் பல செயல்பாடுகளை நிர்வகிக்கிறது. தைராய்டு பிரச்னையால், உடலின் பல இடங்களில் வலி ஏற்படும். சில நேரங்களில் இந்த வலியை தாங்குவது மிகவும் கடினம். இந்நிலையில், சில வீட்டு வைத்தியம் மூலம் இந்த வலியைக் குறைக்கலாம்.

தைராய்டு வலி

கால்களில் வலி, தசை பலவீனம் காரணமாக உடல் வலி, மூட்டுகளில் வலி, கைகளில் வலி, தொண்டை மற்றும் அதற்கு கீழே கடுமையான வலி.

சுரைக்காய் சாறு

தைராய்டு நோய் இருந்தால், சுரைக்காய் சாறு குடிக்கலாம். இந்த சாற்றை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

பச்சை கொத்தமல்லி

தைராய்டு சிகிச்சையில் பச்சை கொத்தமல்லி உதவியாக இருக்கும். சாறு அல்லது சட்னி வடிவில் தினமும் சாப்பிடலாம். இது தைராய்டை கட்டுப்படுத்துகிறது.

தேங்காய் தண்ணீர்

தைராய்டை கட்டுப்படுத்த தேங்காய் தண்ணீர் மிகவும் உதவியாக இருக்கும். இதில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து தைராய்டு வலியைக் குறைக்கிறது.

மஞ்சள்

தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் இரவு தூங்கும் முன் மஞ்சள் கலந்த பால் குடிப்பது நல்லது. இது தைராய்டை கட்டுப்படுத்த உதவுகிறது.

துளசி மற்றும் கற்றாழை ஜூஸ்

இரண்டு டீஸ்பூன் துளசி சாறுடன் அரை டீஸ்பூன் கற்றாழை சாறு கலந்து சாப்பிட்டால் தைராய்டு பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். இது ஹார்மோன் சமநிலையை பராமரிக்கிறது.

அதிமதுரம்

தைராய்டை கட்டுப்படுத்த அதிமதுரம் சாப்பிடலாம். அதிமதுரத்தில் இதுபோன்ற பல சத்துக்கள் காணப்படுகின்றன. சோர்வு மற்றும் பலவீனம் போன்ற பிரச்சனைகளை நீக்கும் உணவு. தவிர, தைராய்டு வலியையும் குறைக்கிறது.