தொப்பையை குறைக்க சில பானங்கள் உங்களுக்கு உதவலாம். இதனை எப்படி செய்வது? இதற்காக தேவையான பொருட்கள் என்னென்ன? இதனை குடிப்பதால் என்ன ஆகும்? என்பதை இங்கே காண்போம்.
தேவையான பொருட்கள்
துளசி இலைகள், இலவங்கப்பட்டை, மஞ்சள்தூள், இஞ்சி
முதலில், அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து சூடாக்கி அதில் 2 கப் தண்ணீரை ஊற்றவும்.
இப்போது இந்த பாத்திரத்தில், மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து கலக்கவும்.
இதனை 10 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். இப்போது தொப்பை கொழுப்பை எரிக்கும் பானம் தயார்.
இந்த பானத்தை காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இது தொப்பையை குறைக்க உதவும்.