தேங்காய் துவையல் சாப்பிட்டு இருப்பீங்க... மாங்காய் துவையல் தெரியுமா? இதோ ரெசிபி!

By Devaki Jeganathan
11 Jun 2025, 22:11 IST

மாங்காயை வைத்து ஜூஸ், சட்னி, சாதம், கிச்சடி, கேக், க்ரீம் செய்து சாப்பிட்டிருப்போம். ஆனால், எப்போவாது மாங்காயை வைத்து துவையல் செய்து சாப்பிட்டது உண்டா? இதோ ரெசிபி.

தேவையான பொருட்கள்

மாங்காய் - 2 நறுக்கியது, எண்ணெய் - 1/2 தேக்கரண்டி, கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி, உளுந்து பருப்பு - 2 தேக்கரண்டி, வெந்தயம் - 1 தேக்கரண்டி, தனியா - 2 தேக்கரண்டி, கடுகு - 1 தேக்கரண்டி, சீரகம் - 2 தேக்கரண்டி, பூண்டு - 4 பற்கள், சிவப்பு மிளகாய் - 20, கல்லுப்பு - 1 1/2 தேக்கரண்டி, மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

தேவையான பொருட்கள்

நல்லெண்ணெய் - 2 மேசைக்கரண்டி, கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி, உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி, கடுகு - 1 தேக்கரண்டி, சீரகம் - 1 தேக்கரண்டி, இடித்த பூண்டு - 5 பற்கள், சிவப்பு மிளகாய் - 2, பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி, கறிவேப்பிலை

செய்முறை படி - 1

கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடலைப்பருப்பு, உளுந்து பருப்பு, வெந்தயம், தனியா, கடுகு, சீரகம் சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும். அடுத்து பூண்டு சேர்த்து வறுக்கவும். பின்பு ஒரு தட்டிற்கு மாற்றி ஆறவிடவும்.

செய்முறை படி - 2

அதே பானில் சிவப்பு மிளகாய் சேர்த்து வறுக்கவும். தட்டிற்கு மாற்றி ஆறவிடவும். ஆறிய பிறகு மிளகாயின் காம்பை எடுத்து விடவும். மிக்ஸர் ஜாரில் வறுத்த மிளகாய், வறுத்த மற்ற பொருட்கள், கல்லுப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்

செய்முறை படி - 3

நறுக்கிய மாங்காய் துண்டுகளை சேர்த்து தண்ணீர் இன்றி மீண்டும் கொரகொரப்பாக அரைக்கவும். தாளிப்பு செய்ய சிறிய பானில் நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம், இடித்த பூண்டு சேர்த்து வறுக்கவும்.

செய்முறை படி - 4

அடுத்து அடுப்பை அணைத்து விட்டு சிவப்பு மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் மாங்காய் துவையலுடன் சேர்த்து கலந்து விடவும். சாதம், இட்லி, தோசை உடன் பரிமாற சுவையான மாங்காய் துவையல் தயார்.