மட்டன் சுவையை மிஞ்சும் அளவுக்கு பலாக்காய் கறி செய்யலாமா?

By Devaki Jeganathan
30 May 2025, 14:09 IST

பலாக்காய் கறி என்பது சுவையான பலாக்காயை வைத்து செய்யக்கூடிய ஒரு சைடிஷ் ஆகும். இது சாதம், சப்பாத்தி, இட்லி, தோசை போன்றவற்றுடன் சாப்பிட ஏற்றது. வாருங்கள், சுவையான பலாக்காய் கறி செய்வது எப்படி என இங்கே பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

பலாக்காயை வேகவைக்க: பலாக்காய், உப்பு - 1 தேக்கரண்டி , மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

மசாலா விழுது அரைக்க

இஞ்சி - 1 துண்டு நறுக்கியது, பூண்டு - 5 பற்கள், காஷ்மீரி சிவப்பு மிளகாய் - 7 ஊறவைத்தது, மிளகு - 1 தேக்கரண்டி, சீரகம் - 1 தேக்கரண்டி, தனியா - 2 தேக்கரண்டி, பட்டை - 2, கிராம்பு - 1, ஏலக்காய் - 1

பலாக்காய் கறி செய்ய

கடுகு எண்ணெய் - 3 மேசைக்கரண்டி, பிரியாணி இலை - 2, சீரகம் - 1 தேக்கரண்டி, வெங்காயம் - 3 நறுக்கியது, அரைத்த மசாலா விழுது, உப்பு - 1 தேக்கரண்டி, தக்காளி - 2 நறுக்கியது, பலாக்காய் வேகவைத்த தண்ணீர், வேகவைத்த பலாக்காய், கொத்தமல்லி இலை நறுக்கியது

செய்முறை படி - 1

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து நறுக்கிய பலாக்காய், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 10 நிமிடம் வேகவைக்கவும்.

செய்முறை படி - 2

மசாலா விழுது அரைக்க மிக்ஸி ஜாரில் இஞ்சி, பூண்டு, காஷ்மீரி சிவப்பு மிளகாய், மிளகு, சீரகம், தனியா, பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து அரைக்கவும். பின்பு தண்ணீர் ஊற்றி விழுதாக அரைக்கவும்.

செய்முறை படி - 3

ஒரு பானில் கடுகு எண்ணெய் ஊற்றி வேகவைத்த பலாக்காயை சேர்த்து 5 நிமிடம் பிரட்டவும். அடுத்து அதே பானில் கடுகு எண்ணெய் ஊற்றி பிரியாணி இலை, சீரகம், வெங்காயம் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.

செய்முறை படி - 4

பிறகு அரைத்த மசாலா விழுது, உப்பு சேர்த்து கலந்து விடவும். தக்காளி சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும். தண்ணீர் சேர்த்து கலந்து விட்டு 10 நிமிடம் வேகவிடவும்.

செய்முறை படி - 5

எண்ணெயில் பிரட்டிய பலாக்காயை சேர்த்து கலந்து விட்டு தண்ணீர் சேர்த்து கலந்து விட்டு 10 நிமிடம் வேகவிடவும். இறுதியாக கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விடவும். சுவையான பலாக்காய் கறி தயார்.