நொடியில் தயாராகும் கார சட்னி.. இதோ செய்முறை!!

By Devaki Jeganathan
10 May 2025, 14:45 IST

குறைந்த செலவில், குறைவான நேரத்தில் சமைக்கும் உணவுதான் சட்னி. இதை பெரும்பாலும் நாம் இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடுவோம். நொடியில் தயாராகும் கார சட்னி செய்முறை இதோ.

தேவையான பொருட்கள்:

வெங்காயம் - 3 நறுக்கியது, பூண்டு - 2 பற்கள், தக்காளி - 2 நறுக்கியது, பியாத்கே மிளகாய் - 12, கல் உப்பு - 1 தேக்கரண்டி, புளி, எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

தேவையான பொருட்கள்

கடலை பருப்பு - 1 தேக்கரண்டி, உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி, கடுகு - 1/2 தேக்கரண்டி, சீரகம் - 1 தேக்கரண்டி, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி

செய்முறை படி - 1

கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்பு பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கவும்.

செய்முறை படி - 2

பிறகு பியாத்கே மிளகாய், கல் உப்பு, புளி சேர்த்து வதக்கவும். பின்பு நன்கு ஆறவிட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.

செய்முறை படி - 3

கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம் சேர்த்து கலந்துவிடவும்.

செய்முறை படி - 4

பின்பு கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து அரைத்த சட்னியை சேர்த்து கலக்கவும். இதோ சுவையான கார சட்னி தயார்!

எப்படி பரிமாறுவது?

இதை இட்லி, தோசை, சப்பாத்தி என அனைத்து உணவுக்கு அட்டகாசமாக இருக்கும்.