புரோட்டீன் பவுடரை இனி கடையில வாங்க வேணாம்.. வீட்டிலேயே சிம்பிளான முறையில் செய்யலாம். இதோ உங்களுக்கான ரெசிபி.
புரோட்டீன் பவுடர்
புரதப் பவுடர் பல நன்மைகளை அளிக்கிறது, குறிப்பாக உடற்பயிற்சி செய்பவர்களுக்கும், தசை கட்டமைப்பு மற்றும் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிப்பவர்களுக்கும். புரதப் பவுடரை உணவில் சேர்ப்பதால் தசை வளர்ச்சி, உடல் எடை மேலாண்மை, காயங்கள் குணமடைதல், நோய் எதிர்ப்பு சக்தி, மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளை நிவர்த்தி செய்வது போன்ற நன்மைகளை பெறலாம்.
தேவையான பொருட்கள்
பாதாம் - 30 கிராம், முந்திரி - 30 கிராம், பிஸ்தா - 30 கிராம் , வால்நட்ஸ் - 30 கிராம், பொட்டு கடலை - 50 கிராம், முலாம்பழம் விதைகள் - 10 கிராம்
தேவையான பொருட்கள்
பூசணி விதைகள் - 10 கிராம், சூரியகாந்தி விதைகள் - 10 கிராம், தாமரை விதைகள் - 50 கிராம், கல்கண்டு - 30 கிராம், குங்குமப்பூ - 1/4 தேக்கரண்டி.
செய்முறை படி - 1
ஒரு பானில் பாதாம், முந்திரி, பிஸ்தா, வால்நட்ஸ், பொட்டு கடலை, முலாம்பழம் விதைகள், பூசணி விதைகள், சூரியகாந்தி விதைகள் சேர்த்து மிதமான தீயில் 4 நிமிடம் வறுக்கவும்.
செய்முறை படி - 2
ஒரு தட்டிற்கு மாற்றி ஆறவிடவும். அதே பானில் தாமரை விதைகள் சேர்த்து மிதமான தீயில் 4 நிமிடம் வறுக்கவும். தட்டிற்கு மாற்றி ஆறவிடவும்.
செய்முறை படி - 3
ஆறியதும் மிக்சிக்கு மாற்றி அதனுடன் கல்கண்டு, குங்குமப்பூ சேர்த்து அரைக்கவும். வாசனையான புரோட்டீன் பவுடர் தயார்.
செய்முறை படி - 4
ஒரு டம்ளரில் புரோட்டீன் பவுடருடன் சூடான பால் சேர்த்து கலந்துவிட்டு குடிக்கவும்.
யார் புரோட்டீன் பவுடரை சாப்பிடணும்?
உடற்பயிற்சி செய்பவர்கள், தசை வளர்ச்சிக்கு முயற்சி செய்பவர்கள், உடல் எடை மேலாண்மைக்கு முயற்சி செய்பவர்கள், காயங்கள் குணமடைய முயற்சி செய்பவர்கள்.