உங்களுக்கும் முள்ளங்கி பிடிக்காதா? அப்போ சட்னி செய்து சாப்பிடுங்க - இதோ ரெசிபி!

By Devaki Jeganathan
24 Jun 2025, 15:12 IST

இட்லி, சப்பாத்தி, பூரி, பரோட்டா, தோசை, ஆப்பம், ஊத்தப்பம், ரொட்டி என அனைத்திற்கும் ஒரே சட்னி சாப்பிட்டு சலித்துவிட்டதா? அப்போ இந்த முறை முள்ளங்கியை வைத்து ஒரு சூப்பரான சட்னி செய்து சாப்பிடுங்க. இதோ ரெசிபி.

தேவையான பொருட்கள்

எண்ணெய் - 3 தேக்கரண்டி, முள்ளங்கி - 2 நறுக்கியது, வெங்காயம் - 1 நறுக்கியது, தேங்காய் - 1/2 கப் நறுக்கியது கறிவேப்பிலை, புளி, கல்லுப்பு - 1 தேக்கரண்டி, மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி, எண்ணெய் - 1 தேக்கரண்டி, தனியா - 2 மேசைக்கரண்டி, சீரகம் - 2 தேக்கரண்டி, சிவப்பு மிளகாய் - 8.

சட்னி தாளிப்பு செய்ய

எண்ணெய், கடுகு, சீரகம், சிவப்பு மிளகாய் - 1, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை

செய்முறை படி - 1

முதலில் ஒரு கடாயை எடுத்து எண்ணெய் விட்டு, முள்ளங்கியை சிறு துண்டுகளாக நறுக்கி இரண்டு நிமிடம் அதிக தீயில் வதக்கவும்.

செய்முறை படி - 2

2 நிமிடம் கழித்து வெங்காயத்தை நறுக்கி இரண்டு நிமிடம் வதக்கவும். பின்னர் தேங்காய் துண்டுகளை சேர்த்து வதக்கவும். ஒரு நிமிடம் கழித்து சிறிது கறிவேப்பிலை, சிறிது புளி, கல்லுப்பு, சிறிது மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.

செய்முறை படி - 3

பின்னர் முழுவதுமாக ஆறவிடவும். இப்போது மற்றொரு சிறிய கடாயை வைத்து எண்ணெய், கொத்தமல்லி, சீரகம், மிளகாய் சேர்த்து சிவப்பு மிளகாய் நிறம் மாறும் வரை வறுத்து, ஒரு தட்டில் எடுத்து முழுவதுமாக ஆற வைக்கவும்.

செய்முறை படி - 4

இப்போது மிக்ஸி ஜாரில் முன் வறுத்த தனியா, சீரகம் மற்றும் சிவப்பு மிளகாய் சேர்த்து நன்கு அரைக்கவும். பிறகு வறுத்த முள்ளங்கி மற்றும் வெங்காயம் தேங்காய் கலவையை சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும்.

செய்முறை படி - 5

ஒரு தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், சிவப்பு மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து கலந்துவிட்டு சட்னியில் சேர்க்கவும். சுவையான முள்ளங்கி சட்னி தயார்.